பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

163

இனி இத்தகு செயல்களில் நான் என்றென்றைக்கும், என்றைக்குமே ஈடுபடக் கூடாது! ஈடுபட்டால் புகழ்க்கோட்டை மாயக்கோட்டை மண்ணுடன்....'

என்

இந்த எண்ணச்சுழல்கள் அவனை அரித்துத்தின்று கொண்டிருந்தன.

இறுதியில் ஒருவகையாக கோரெமிட்சு வந்து சேர்ந்தான். அந்தோ! தன் தலைவன் விருப்பம் எதுவாயினும் தான் அதை இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும் உடனடியாகச் செய்து முடித்துவிடுபவன் என்று அவன் பெருமை கொண்டிருந்தவன். ஆனால் ஒரே ஒரு தடவை அவன் அருகிலில்லாமலிருக்க நேர்ந்தது- அந்தச் சமயம் பார்த்தா கெஞ்சி தன்னை அவசர அவசரமாகத் தேடும்படி நேர்ந்திருக்க வேண்டும்! இது மட்டுமோ? எப்படியோ கேள்விப்பட்டதும் விழுந்தடித்து ஓடிவந்தபின், தலைவர் தனக்கு எத்தகைய ஆணையும் பிறப்பிக்காமல், பேச்சற்று மூச்சற்று நிற்கிறார்!

அவன் உள்ளம் வெடித்துவிடும்போலிருந்தது!

கோரெமிட்சுவின் குரல்கேட்டு உகான் உடனடியாக எழுந்து உணர்வு பெற்றாள். அடுத்த கணம் நடந்ததை நினைவில் கொண்டு கண்ணீர் விட்டுக் கோவென்று அழுதாள். இதுவரை தனிமையிலே தன்துயர் முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அவதியுற்றான் கெஞ்சி. அழுதரற்றிய பணிப்பெண் உகானைக்கூட அவன் தேற்றி வந்திருந்தான். இப்போது கோரெமிட்சு வந்துவிட்டதுணர்ந்ததே, அவன் தன் உணர்ச்சி களை மேலும் கட்டுக்குள் அடக்க முடியாமல் வீறிட்டழத் தொடங்கினான். நடந்துவிட்ட நிகழ்ச்சியின் முழுப்பயங்கர உருவும் அவன்முன் இப்போதுதான் காட்சியளித்தது. அது தாளாது அவன் விம்மி விம்மித் தேம்பினான்!

செய்தியைக்கூட அவனால் விளக்கமுடியவில்லை. இறுதியாக ஓரளவு தன்னைச் சமாளித்துக் கொண்டு அதைச் சுட்டித் தொட்டும் தொடாமலும் பேசினான்.

6

துணுக்குற வைக்கும் செய்தி நிகழ்ந்துவிட்டது, கோரெமிட்சு! வாய்மொழியால் சொல்லி விளக்கமுடியாத அளவில் நடுக்கம் தரும் செய்தி! இத்தகைய பேரிடிகள்