பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 22

(164) || __ __ விழும்போது, சிலசமயத்தில் திருமொழிகள் படிக்கப்பட வேண்டுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது நடைபெற வேண்டும், வணக்கவழிபாடுகள் நடத்தப்பட வேண்டும். இதனால் தான் உடன்பிறந்தாரையும் உடன் கொண்டுவரும்படி

உங்கள்

""

கோரெமிட்சு ஏங்கினான்.

அந்தோ! அவர் நேற்றுத்தான் மலைக்குச் சென்றிருக்கிறார்! ஆனால் இங்கே உண்மையிலே பயங்கர நிகழ்ச்சிகள் தான் நடைபெற்றிருக்கக் காண்கிறேன்.

'ஐயனே!' என்ன பித்தவெறியில் நீங்கள் இக்காரியத்தில் இறங்கினீர்களோ? அறியேன்...'

கெஞ்சி வாய்பேசவில்லை. வெறுமனே தலையசைத்து

நின்றான்.

தன் தலைவர் வாய்பேசாது அழும் காட்சி காணப்பொறாமல் கோரெமிட்சு தானும் தேம்பித் தேம்பி அழலானான். அவன் வயது இன்னும் சிறிது சென்றவானாக, உலகியல் போக்கிறந்தவனாக இருந்திருந்தால், இத்தகைய நெருக்கடிகளை ஓரளவு சமாளிக்கப் பயன்பட்டிருப்பான். ஆனால் இருவரும் இளைஞராதலால், இருவரும் ஒருங்கே மலைப்பெய்தினர்.

இறுதியில் கோரெமிட்சு பேசினான்.

'ஒரு செய்தியைமட்டும் நாம் தெளிவாக முடிவு செய்துவிடவேண்டும். மனைக் காவலன் மைந்தன் இது ஒன்றும் அறியக்கூடாது. அவனளவில் அவன் நம்பகமானவனே. ஆயினும் அவன் இயல்புநோக்க, அவன் தன் உறவினர் அனைவரிடமும் தெரிவிக்கமாட்டான். அவர்கள் இவ்வகையில் குந்தகம் விளைவிப்பார்கள். ஆகவே எவ்வளவு சந்தடியில்லாமல் இந்த வீட்டைவிட்டுச் செல்ல முடியுமோ அந்த அளவும் நலம்' என்றான்.

கெஞ்சி: இதைவிட ஒதுக்கமான மற்றோரிடத்தை நாம் எங்கே கண்டுபிடிப்பது?