பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

165

கோரெமிட்சு: எப்படியும் அவள் வீட்டுக்கு நாம் அவளை இட்டுச்செல்ல முடியாது. ஏனெனில் அவளை ஆர்வமுடன் நேசிக்கும் அவள் பாங்கியர், அவளுக்காக அழுதரற்றி ஆரவாரிக்காமல் இருக்க முடியாது. இதனால் அயலவர்க ளெல்லாம் கூடிவிடுவர், எல்லாம் வெட்ட வெளிச்சமாய் விடும். அருகே ஏதாவது மலைக் கோயில் மட்டும் இருந்தால் - அங்கே இது முழுவதும் வழக்கப்படி இயல்பாகி விடும், எவரும் எதுவும் அசாதாரணமாகக் கருதமாட்டார்கள்.

அவனே சிறிது நின்று தயங்கி ஆலோசித்தான். பின்

பேசினான்.

‘எனக்குத் தெரிந்த ஒரு சீமாட்டி உண்டு, அவள் துறவு நங்கையாகி ஹிகாஷியாமாவில் வசிக்கிறாள். அவள் என் தந்தையின் செவிலித்தாயாய் இருந்தவள். இப்போது கூனித் தளர்ந்து முதுமையடைந்துள்ளாள். அவள் தனியாய் வாழ வில்லை. ஆயினும் வெளியார் எவரும் அங்கே செல்வதில்லை' என்றான்.

கீழ்வானில் விடியல் வள்ளொளி ஏற்கெனவே மங்கலாகத் துலங்கிற்று. கோரெமிட்சு ஒரு வண்டியைக் கொண்டு வந்தான். கெஞ்சி நங்கையின் உடலைத் தானே எடுக்கப் பொறுக்க மாட்டான் என்றுணர்ந்து, அதைப் பாயில் சுருட்டி வண்டிக்குக் கொண்டு சென்றான்.இதில் அவன் எத்தகைய அருவருப்பும் கொள்ளவில்லை. ஆனால் அவள் கூந்தலை மட்டும் எப்படி மறைப்பதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவளைக் கொண்டு செல்லும் சமயம் அது தொங்கிக் கொண்டே தரைமீது புரண்டது.

கெஞ்சி இக்கோரக்காட்சியைக் கண்டான். அவன் உடல்முழுதும் சொல்லொணா வேதனையால் துடிதுடித்தது.

கெஞ்சி உடலைத் தொடர்ந்து பின் செல்லவே முனைந்தான். ஆனால் கோரெமிட்சு அவனைத் தடுத்து எச்சரித்தான்.

‘நீங்கள் கூடிய வேகத்தில் அரண்மனைக்கே குதிரை மீது விரைவது அவசியம். அங்கே புகைச்சல் தொடங்குமுன் நீங்கள் அங்கேபோய்ச் சேர்ந்து விடுவது நலம்' என்று கூறி உகானை