பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

167

தெரிந்தவகையிலெல்லாம் முயன்றனர். ஆனால் அவன் மணிக்கணக்காக இருண்ட நினைவலைகளுக்கு ஆளாய்க் கிடந்தான். வகை வகையான நல்லுணவுகளைப் பணிமக்கள் கொண்டு கொண்டு வந்தனர். அவன் தொடாமலே அவை திரும்பிக் கொண்டு செல்லப்பட்டன.

இச்சமயம் சக்கரவர்த்தியிடமிருந்து ஒரு தூதன் வந்தான். 'நேற்றிலிருந்து மேதக்க மன்னர் மன்னர் தம் திருமேனியைத் தேட எங்கும் ஆள் அனுப்பியிருக்கிறார். தங்களைப் பற்றி மிகவும் கவலை கொள்கிறார்' என்று வந்து கூறினான்.

நெடுமாடத்திலிருந்து பெருங்குடி இளைஞர் பலர் மற்றொருபுறம் வந்து கெஞ்சியைக் காணவிரும்பினார்கள். ஆனால் தோ நோ சூஜோவிடம்கூட அவன் திரைக்கு உள்ளே இருந்தபடிதான் பேசினான்.

'ஐந்தாம் மாதம்முதல் என் செவிலித்தாய் மிகவும் உடல்நலம் குன்றியிருக்கிறாள். அவள் தலையை மொட்டை யடித்தும் மற்ற நோன்புகளாற்றியும் அவற்றின் பயனாக (அல்லது அவற்றின்பயன் என்ற நம்பிக்கையுடன்) சிறிது தேறி எழுந் துள்ளாள். ஆனால் இன்னும் அவள் உடல் வலுவற்று நலிந்தே இருக்கிறாள். தான் இறப்பதற்குமுன் என்னைப் பார்க்க விரும்புவதாக அவள் சொல்லியனுப்பினாள். குழந்தைப் பருவ முதலே நான் அவள் மீது பாசமாயிருந்தவனாதலால், இதை என்னால் மறுக்கக்கூடவில்லை. ஆனால் நான் அங்கே சென்றிருக்கும் சமயம் மனையின் வேலையாள் ஒருவன் நோயுற்றுட் திடுமென உயிர்நீத்தான். என் நிலைமை எண்ணி இரவே உடலை அகற்றி அடக்கம் செய்துவிட்டனர்வீட்டார். ஆயினும் இதுகேள்விப்பட்ட போது நான் ஒன்பதாம் மாதத்து நோன்பு அணுகிவிட்டதென்பதை எண்ணினேன். தந்தையாராகிய சக்கரவர்த்தியை நான் சென்று காணாததற்குக் காரணம் இதுவே, இத்துடன் இன்று காலைமுதல் எனக்கு இருமலும் மிக மோசமான தலையிடியும் வந்து தொல்லைப்ப டுத்தி வருகின்றன. இந்நிலையில்தான் உன்னைக்கூட இவ்வளவு தொலைவாக வைத்துப் பேசவேண்டியவனாகிறேன். அதற்கு மன்னிப்பாய் என்றும் நம்புகிறேன்' என்றான்.

என்