பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(168) ||__

அப்பாத்துரையம் - 22

சூஜோ : நீ கூறிய செய்தியைச் சக்கரவர்த்தியிடம் கட்டாயம் தெரிவிக்கிறேன். ஆனால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் கூறுவதற்கு மன்னிக்க வேண்டும் அவர் மிகவும் மனத்தாங்கலுடன் இருக்கிறார்.

-

இவ்வாறு கூறித் தோ நோ சூஜோ போக எழுந்தான். ஆனால் ஒருகணம் தயங்கி, திரும்பவும் படுக்கையண்டை வந்து குரலைத் தாழ்த்திக் கொண்டு மீண்டும் தொடங்கினான். 'உண்மையிலேயே நேற்று இரவு நிகழ்ந்தது என்ன? நீ சற்றுமுன் கூறியது உண்மையாயிருக்கமுடியாது' என்றான்.

‘நீ விளக்கவிவரம் எதுவும் கூறவேண்டாம். என்னையறி யாமலே நான் தீட்டுக்கு ஆளாகியிருக்கிறேன் என்று மட்டும் கூறி உன்போக்கிலேயே அவரிடம் மன்னிப்புக் கோரிக்கொள்' என்றான் கெஞ்சி.

அவன் பேச்சில் சிறிது கண்டிப்பின் தொனி இருந்தது. ஆனால் அவன் உள்ளத்தில் விவரிக்க முடியாத சோகமே குடிபுகுந்திருந்தது. அவன் நாடிநரம்புகள் தளர்ந்து செயலற்றுக் கிடந்தன.

பகல் முழுவதும் அவன் எவர் கண்ணிலும் படாமல் படுக்கையிலேயே கழித்தான். ஒரு தடவைமட்டும் தோநோ சூஜோவின் உடன் பிறந்தானான 'குரோதோ நோபென்'னை வரவழைத்து அவன்மூலம் சக்கரவர்த்திக்கு முறைப்படி ருசெய்தி எழுதியனுப்பினான். இதே வகைச் சாக்குப்போக்கே நெடுமாடத்துக்கும் போதியதென்று கருதி, அங்கும் இதுபோலச் செய்தி தெரிவித்தான். தன்னை எதிர்பார்க்கத்தக்க மற்ற இடங்களுக்கும் இது போன்ற தகவல் எழுதியனுப்பினான்.

விளக்குவைக்கும் நேரத்தில் கோரெமிட்சு வந்தான். கெஞ்சிக்குத் தீட்டு என்ற செய்தி அவன் இல்லத்துக்கு வருகை தருபவர்களைத் தடுத்து நிறுத்தியது. இதனால் மாளிகையில் தனிமை நிலவிற்று. கோரெமிட்சுவை அருகிலழைத்துக் கெஞ்சி அவனிடம் ஆவலுடன் பேசினான். 'என்ன நடந்தது?” அவள் இறந்துவிட்டது இறந்துவிட்டதுதானா?' என்று கேட்டான். அதற்குள் கண்கள் பொலபொலவென்று நீருகுத்து அவன் சட்டை நுனியெல்லாம் நனைத்துவிட்டது. கோரெமிட்சுவும் அழுதுகொண்டே பதிலளித்தான்.