பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

169

எல்லாம் முடிந்துவிட்டது, ஐயனே!' மயக்கதயக்கத்துக்கு எதுவும் இடமில்லை. உடலை இதன்பின் நீடித்து அப்படியே வைத்துக்கொண்டிருக்க முடியாதாதலால், நான் மதிப்பு வாய்ந்த ஒரு முதுமைசான்ற புரோகிதருடன் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டேன். அவர் என் நண்பர்.நாளை நல்ல நாளானதால், நாளையே இறுதிவினை நடைபெற ஏற்பாடு செய்திருக்கிறேன்' என்றான்.

கெஞ்சி: அவள் தோழியின் செய்தி என்ன?

கோரெமிட்சு: அவள் பிழைப்பது அருமை என்று அஞ்சுகிறேன். தன் தலைவியுடனே தானும் சென்றுவிட வேண்டுமென்று அவள் கதறுகிறாள். அத்துடன் இ ன்

நான்

று காலை

மட்டும் விழிப்பாயிருந்து அவளைப்பிடித்துக் கொள்ளவில்லையானால், அவள் கொடும்பாறை ஒன்றிலிருந்து குதித்து இறந்திருப்பாள். இதுமட்டு மன்று. இச்செய்தியை மனையிலுள்ள பணியாட்கள் அனைவரிடமும் கூறிவிடப் போவதாகவும் அவள் அச்சுறுத்தினாள். 'அவ்வாறு செய்யுமுன் அதன்விளைவு எதிர்விளைவுகள் பற்றிச் சிறிது நினைத்துப் பார்' என்று கூறி நான் அவளைச் சமாதானப்படுத்தினேன்.

கெஞ்சி: பாவம்! அவள் இப்படி மூளைகுழம்பி விட்டதுபற்றி நான் வியப்படையவில்லை. நானும் கிட்டத்தட் அந்நிலையிலேயே இருக்கிறேன். இனி என் செய்தி என்ன ஆவது என்று எனக்கே தெரியவில்லை.

கோரெமிட்சு: இன்னும் உங்களை நீங்களே இவ்வாறு வருத்திக்கொள்ள வேண்டாம். நடப்பவை எல்லாம் நடந்தே தீரும். உங்கள் காரியங்களையெல்லாம் நீங்கள் இல்லாமலே முடிக்க நான் இருக்கிறேன். எவருக்கும் எதுவும் தெரியப் போவதில்லை.

கெஞ்சி: நடப்பவை நடக்கட்டும். நீ கூறுவது சரியே. இப்படித்தான் நானும் என்னைத் தேற்றிக் கொள்ள முனைகிறேன். ஆயினும் என் கட்டற்ற இன்ப வாழ்வை நாடி நான் தீங்கிழைத்ததுடன் நில்லாமல், ஒருவர் உயிர் இழப்பதற்கே காரணமாய்விட்டேன். இது பெருங்குற்றம். தீராப்பழியின் இச்சுமையுடனே நான் உலகவாழ்வில் உழலவேண்டும். இதை உன்