பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




-

கெஞ்சிக் கதை

171

இப்போது கெஞ்சிக்குத் திடீரென்று ஒரு நினைவு எழுந்தது இனி அவளைத் தான் காண முடியாதென்று! நீ தவறான செயலென்று நினைக்கக்கூடும், கோரெமிட்சு. ஆனால் உன்னுடன் நான் வரவிரும்புகிறேன். குதிரை ‘மீதே வர எண்ணுகிறேன்' என்று கோரெமிட்சு விடம் கூறினான்.

'அதுவே உங்கள் உறுதியான விருப்பமானால், நான் உங்களிடம் வாதாடுவதில் பயன் இல்லை. எப்படியும் விரைவில் புறப்படுவோம். அப்போதுதான் இரவு கழியுமுன் திரும்ப முடியும்' என்றான்.

வேட்டைக்குரிய சாக்கில் அதற்கு வேண்டிய உடையில் தன்னை உருமாற்றிக் கொண்டு, கெஞ்சி புறப்பட்டான்.

ஏற்கெனவே அவன் மிகக் கொடிய வேதனைகளுக்கு ஆளாகியிருந்தான். இப்போது புதுமை வாய்ந்த இந்தப் பயணத்துக்கு அவன் புறப்பட்ட சமயம் புத்தம்புதிய இருண்ட கருத்துகள் அவன் உள்ளத்தை நிறைத்து அவனுக்குப் புதியதோர் அச்சம் எழுப்பின. அவளை அழித்த மறைபுதிரான ஆற்றல் இந்தப் பயணம் காரணமாக மீண்டும் சீறியெழக் கூடுமோ என்று அவன் பயந்தான். போகவேண்டுமா, போகாமலிருந்து விடுவதா என்று அவன் மீண்டும் தயங்கினான். ஆயினும் இப்பயணத்தால் அவன் துயரம் குறைவதற்கு வழி இருக்க முடியாதானாலும், இப்போது பார்க்காவிட்டால், இனி எப்போதும், ஒரு வேளை எப்பிறப்பிலும், தன் ஆர்வப் பாசத்துக்குரிய அந்த முகத்தையும், உருவையும் காண முடியாமல் போய்விடுமே என்று கருதி அவன் ஒரு முடிவுக்கு வந்தான். முடிவாக கோரெமிட்சுவுடனும் ஒரே ஒரு குதிரை வலவன் துணையுடனும் அவன் பயணமானான்.

வழி முடிவற்றதாகத் தோன்றிற்று. பதினேழாம் இரவுநிலா 'கமோ’ச்சமவெளியெங்கும் ஒளி படர்வித்தது. அதன்பின்னும் முன்னோடிகளின் பந்த ஒளி டாரிபெனோ அருகிலுள்ள நாட்டெல்லைக்குக் கொண்டு சென்றது. ஆனால் நோயும் மனக்கசப்பும் இவற்றைக் கவனிக்க முடியாதபடி கெஞ்சியின் உணர்வைக் கலக்கின. அந்த அரைஉணர்வு நிலையிலேயே பயணம் முடிந்துவிட்டதறிந்து கெஞ்சி குதிரையை விட்டு இறங்கினான்.