பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

கு

173

கெஞ்சி உகானைத் தன்னுடன் வந்துவிடும்படி அழைத் தான். ஆனால் அவள் மறுத்து விட்டாள். ‘அணங்கு சிறு குழந்தையாய் இருந்தது முதல் நான் அவளிடம் சேவை செய்து வருகிறேன். இடையே ஒரு மணிநேரம் கூட அவளை விட்டுப் பிரிந்து வாழ்ந்ததில்லை. இந்த அளவு எனக்கு அருமையாயிருந்த ஒருவரைவிட்டு நான் எப்படிப் பிரிந்து இன்னொரு மனை செல்ல முடியும்? அத்துடன் நான் சென்று அவள் ஆட்களிட மெல்லாம் அவள் என்னவானாள் என்று கூறவேண்டும். ஏனெனில் அவள் இறந்தவகை காண, நான் விரைந்து சென்று கூறவில்லையானால் குற்றவாளி நானே என்ற கூக்குரல் கிளப்பப் படலாம். அது எனக்கு இன்னும் பயங்கரமான தாயிருக்கும் ஐயனே!' என்று கூறி அவள் மேலும் உரக்க அழுதரற்றினாள். இறுதியில் 'நான் பாடையில் அவளுடனே கிடப்பேன். அவள் புகையுடன் என் புகையும் சேர்ந்து பரவட்டும்' என்றாள்.

கெஞ்சி அவளுக்கு ஆறுதல்கூற விரும்பினான். 'பரிதாபத் துக்குரிய பெண்ணே!' உன் மனக்கசப்பைக் கண்டு நான் வியப்படையவில்லை. ஆனால் இதுவே உலகின் இயல்பு. அவள் சென்ற இடத்துக்கு முன்னோ பின்னோ, நாம் அனைவரும் செல்ல வேண்டியவர்களே! ஆகவே துன்பத்தை ஆற்றியிரு. என்னிடம் நம்பிக்கை கொள்' என்றான். இது அவளை ஆற்றமுடியாது என்றுணர்ந்து மேலும் பேசினான். 'இந்தச் சொற்கள் பொருளற்றவை என்பதை நான் அறிவேன். நானும் கூட இந்த வாழ்க்கைபற்றிக் கவலை கொள்பவன் அல்ல. அவளுடன் நானும் மகிழ்வுடன் செல்லவே விரும்புகிறேன்' என்றான். இந்தச் சொற்கள் ஆற்றுவதற்கு மாறாக, அவள் துன்பத்துடன் அவன் துன்பத்தையும் ணைக்கவே

பயன்பட்டன.

கோரெமிட்சு இப்போது கெஞ்சியை அணுகினான். 'இரவு நெடுநேரமாயிற்று. இப்போது நாம் புறப்பட வேண்டும்' என்றான். பலதடவை பின்னோக்கி மறுகும் கண்களுடனும், துன்பச் செறிவால் விம்மி வெடிப்பது போலிருக்கும் இதயத்துடனும் அவன் அம் மனையை விட்டகன்றான். பனி மிகுதியாகப் பெய்திருந்தது. மூடு பனி எங்கும் அடர்த்தியாகப் பரவியிருந்தது. இவற்றிடையே பாதையைக் காண்பது அரிதாயிருந்தது.