பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

175

களில் போக்குவரவு மிகுந்து வருவதை அவர்கள் கவலையுடன் கவனித்து வந்தனர். ஒவ்வொரு பயணத்தின் பின்னும் அவன் களைத்த தோற்றத்துடனும் மாறுபட்ட இதயத்துடனும் வந்தாலும், அவன் அன்று போல் என்றும் அவ்வளவு பஞ்சடைந்த தோற்றம் அளித்ததில்லை. 'இந்த இடைவிடாத அலைச்சல்களின் நோக்கம் என்னவாயிருக்க முடியும்?' நம்பிக்கையிழந்து கவலைதோய்ந்த முகத்துடன் அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கித் தலையசைத்துக் கொண்டனர்.

கெஞ்சி படுக்கையில் வந்து விழுந்தவன் பல நாட்களாகக் காய்ச்சலாலும் உடல்நோவாலும் அவதியுற்றான். அவன் நாடி மிகத் தளர்ந்து விட்டது. மேன்மேலும் தளர்ந்து வந்தது. இச்செய்தி அறிந்தபோது சக்கரவர்த்தி முழுதும் ஒளியிழந்தார். எல்லாக்கோவில்களிலும் அவனுக்காக வேண்டுதல் வழிபாடுகள் நடைபெறும்படி அவர் கட்டளையிட்டார். இவை தவிர, தனிப்பட்டவர்கள் முயற்சியால் பல்வேறிடங்களிலும் நடைபெற்ற வேண்டுதல் வழிபாடுகள், வணக்கங்கள், கழுவாய் வினைகள் ஆகியவற்றை இங்கே எடுத்துரைக்க முடியாது. அவை அந்த அளவு எண்ணிறந்தவை. அழகுக்கும் கவர்ச்சிக்கும் பேர்போன இந்த அருமை இளவரசன் இறக்கக்கூடுமென்ற ஐயம் ஏற்பட்ட போது, பேரரசெங்குமே பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது.

இவ்வளவு நோக்காட்டிலும் கெஞ்சி உகானை மறந்துவிட வில்லை. அவளை வரவழைத்துத் தன் பாங்கியர் குழுவில் சேர்த்துக் கொண்டான். கோரெமிட்சு இப்போது தன் தலைவனின் நிலைபற்றி மிகவும் கவலை கொண்டிருந்தான். ஆனால் தலைவன் குறிப்பறிந்து அவன் தன் கவலையை அடக்கிக் கொண்டு உகானின் புதிய கடமைகளில் அவளுக்கு வேண்டிய துணை உதவிகளைச் செய்து பயிற்றுவித்து வந்தான். அவளது துணையற்ற அவல நிலையில் அவளிடம் தனிப்பட்ட முறையிலும் மிகவும் பரிவு கொண்டிருந்தான். கெஞ்சியும் அவ்வப்போது, ஒரு சிறிதே உடல்நலம் ஏற்பட்டபோதெல்லாம் தன் கடிதங்களைக் கொண்டு செல்லும் வேலையை அவளிடமே ஒப்படைத்தான். இதனால் அவளும் அவன் சேவையில் எளிதில் பழகினாள். அவள் திண்ணிய கறுப்பு உடை அணிந்திருந் தாள்.வனப்புடையவள் என்றுகூற முடியா விட்டாலும், அவள் தோற்றம் இனிதாகவே இருந்தது,