பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

179

மாறாட்டங்களுக்கிடையே கூட, நான் என் உள்ளத்தை அவள் மீது ஓடவிட்ட முதல் நாள் மாலைப் போதிலிருந்து என் அறிவு என்னைத் தடுத்த போதிலும் நான் ஒரு சிறிதும் அவள் காதலில் முன்னேறத் தயங்கியதில்லை. உண்மையில் தற்போது என் இடைவிடாத வேதனைக்கும் கழிவிரக்கத்துக்கும் உரிய நடவடிக்கையைச் செய்யும்படி என் ஊழ்வலிதான் என்னைப் பிடர்பிடித்து உந்தியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆயினும் இப்போது அவளைப்பற்றி மேலும் தகவல்கள் அறிய அவாவுகிறேன்.ஏனெனில் இச்சமயத்தில் ஒளிப்பு மறைப்புக்குரிய காரணம் எதுவும் இல்லை. மேலும் அவள் நற்கதியையும் அமைதியையும் முன்னிட்டு நான் வாரத்தின் ஒவ்வோர் ஏழாம் நாளிலும் புத்தர்களின் பெயர்களைத் திரு எழுத்தில் எழுதுவிக்க

எண்ணுகிறேன். இவற்றிலும் என் தனி வேண்டுதல்

வழிபாடுகளிலும் நான் அவளை எப்பெயரால் குறிப்பேன்?' இவ்வாறு கெஞ்சி வாதாடினான்.

உகான் இப்போது மனந்திறந்து பேசினாள்.

'உங்களுக்கு இவற்றைச் சொல்வதில் தீங்கு எதுவுமே ல்லை. முன்பே நான் இவற்றைத் தெரிவித்திருக்கக்கூடும். ஆனால் என் தலைவி உயிருடனிருக்கும் போது நான் சொல்வதை விரும்பவில்லை யாதலால், அது வகையில் நான் எதுவும் வெளியிடுவது தவறு என்று இருந்துவிட்டேன். அவள் பெயர் யுகாவ். அவள் சிறுமியாய் இருக்கும் போதே தாய் தந்தையர் இருவரும் ருவரும் மறைந்து விட்டார்கள். அவள் அழகுமிக்கவளா யிருந்தாள். அவள் தந்தை சம்மி சூஜோ அவளிடம் உயிராயிருந்தார். ஆயினும் அவள் அழகுக்கேற்ற நலங்களை அளித்து அவளுக்குத் தன் கடமையைச் சரிவர ஆற்ற முடியாதே என்று வருந்தினார். அவள் வருங்காலத்தைப் பற்றிய மனச் சஞ்சலத்திடையிலேயே அவர் மாள நேர்ந்தது.

'இதற்குச் சில நாட்களுக்குப் பின் தற்செயலாக அவள் தோ நோ சூஜோவுடன் பழக நேர்ந்தது. அவர் இச்சமயம் படைத் துறைத் துணைவராக மட்டுமே இருந்தார். மூன்றாண்டுகள் அவர் அவள் வாழ்வை இன்பகரமாக்கினார். ஆனால் மூன்றாம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் வலங்கை நெடுமாடத்திலிருந்து மனங்குலைய வைக்கும் கடிதங்கள் வரத் தொடங்கின. இயல்பாக