பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

181

நடந்தவற்றையெல்லாம் பற்றி வாதிடும் துன்பகரமான அவசியம் ஏற்பட்டுவிடும். எனவேதான் எப்படியாவது அக்குழந்தையை இங்கே கொண்டு வந்து அரண்மனையில் வைத்து வளர்க்க விரும்புகிறேன். இதில் தீங்கு எதுவும் இராதென்றே தோற்றுகிறது. அத்துடன் அவளைத் தற்போது பேணிக்காப்ப வரிடமும் நீ எளிதாக வேறு ஏதேனும் கதை கட்டிக் கூறி விட முடியும்' என்று அவன் மீட்டும் தொடர்ந்தான்.

“உங்கள் மனதில் இந்த எண்ணம் எழுந்ததற்கு மகிழ்கிறேன். ஏனெனில் தற்போது வாழும் இடத்திலேயே குழந்தை வளர்வது அவள் எதிர்காலத்துக்கு உகந்ததன்று. அங்கே அவளுக்கு உரியவராக எவரும் இல்லை. இடமும் நகரின் அத்தகைய ஒதுங்கிய பகுதி’

மாலையின் அமைதி அந்திவானத்துக்கு அகங்குளிர்விக்கும் அரிய அழகு தந்தது. அவன் மாளிகையின் முன்புற எல்லையில் அங்குமிங்கும் தும்பிகள், வண்டுகள் போன்ற சிற்றுயிர்கள் தம் சிறுகுரலெடுத்து இரைந்தன. இலைகள் இப்போதுதான் பழுப்புநிறம் கொள்ளத் தொடங்கியிருந்தன. மனோரம்மியமான இந்தச் சூழலுக்கும் மாண்ட அணங்கு யுகாவ் வாழ்ந்த சூழலுக்கும் இடையேயுள்ள பெருவேறுபாட்டை அவன் உளங்கொண்டு உள்ளூர உட்கினான். இச்சமயம் மூங்கில் புதர்களிடையே இருந்து ஒரு பறவை கிரீச் சென்று குரலில் கத்திற்று. துன்ப முடிவுக்குக் காரணமான அந்த மனையின் தோட்டத்தில் இதேவகைப் பறவை இதே குரலில் கத்தி யுகாவுக்கு நடுக்கமளித்ததை அவன் எண்ணினான். உடனே அவன் உகானிடம் விரைந்து சென்றான்.

‘அவளுக்கு வயது என்ன இருக்கும்? அவள் துணையற்ற நிலையும் அச்ச அவநம்பிக்கைகளும் குழந்தையின் இயல்புக் கொத்தவையாய் இருந்தாலும், அவை உண்மையில் அவள் இவ்வுலகிலிருந்து அவ்வுலகிற்குத் தாவ இருந்தவள் என்பதன் அறிகுறிகளாகவே இருத்தல் கூடும்' என்றான்.

'அவள் அச்சமயம் பத்தொன்பது வயதுடையவளாய் இருந்திருக்கவேண்டும். அவளது முதல் செவிலித்தாயாய் இருந்தவள் என் தாய்! என்தாய் இறந்தவுடன் நான் துணையற்ற வளானேன். அதுகண்ட என் தலைவியின் தந்தை என் மீ

து