பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182) ||_

அப்பாத்துரையம் - 22

கருணை கூர்ந்து என்னையும் என் தலைவியுடன் இணைத்து வளர்த்தார். அந்தோ, ஐயனே! இவற்றை எண்ண எண்ண, அவளில்லாமல் நான் எப்படி வாழப் போகிறேன் என்று எனக்குச் சிறிதும் விளங்கவில்லை. இங்குள்ள மக்கள் மிகவும் அன்புடையவர்களாகவே இருக்கிறார்கள். ஆயினும் என்னால் அவர்களுடன் எளிதில் பழகிவிட முடியவில்லை. பாவம், என்தலைவி. எத்தனையோ ஆண்டுகளாக எனக்கு உற்ற துணைவியாகவும் இருந்து என்னுடன் இழைந்திருந்தாள். அவள் போக்கும் நடையும் நன்குணர்ந்து, அவற்றை நான் என்னுடையனவாகப் படியவைத்துவிட்டேன்' என்றாள் உகான்.

கெஞ்சியின் நினைவுக்களத்தில் சாயக்காரனின் கைத்தடி யோசை கூடப் புனித அருநினைவாகியிருந்தது. அதைச் செவிமடுத்த வண்ணம் படுக்கையில் கிடந்தபோது, கவிஞன் மோ- சூயியின் அடிகளை அவன் இதழ்கள் முணுமுணுத்தன.

‘எட்டாவது ஒன்பதாவது மாதங்களிலே எட்டாது நீளும் இராக் காலங்களிலே

தட்டுகின்ற சாயக்காரன் கைத்தடியோசை

எட்டாயிரம், பத்தாயிரம் எனப் பெருகினவே!'

அவனுடன் இருந்த சிறுவன் தொடர்ந்து அவனிடமே பணிசெய்து வந்தான். ஆனால் அவன் முன் போல இப்போது கடிதங்கள் இங்கும் அங்கும் கொண்டு செல்வதில்லை. தான் அவனைக் கடுமையாக நடத்தியதன் பயனாக, கெஞ்சி தன் நட்புக்கு ஒரு முற்றுப்புள்ளிவைக்க முடிவு செய்துவிட்டானோ என்று உத்சுசேமி எண்ணினாள். இவ்வெண்ணம் அவளை உள்ளூரப் புண்படுத்திற்று. ஆனால் இதற்குள் அவன் கடும் பிணியின் செய்தி அவள் காதுகளுக்கு எட்டிற்று. அவள் வேதனை முழுதும் கழிவிரக்கமாகவும் கவலையாகவும் திகிலாகவும் மாறிற்று. அவள் தன் தொலைப்பயணம் தொடங்கும் தறுவாயில் இருந்தாள். ஆனால் அவள் கவனம் இப்போது அதில் இல்லை. கெஞ்சி தன்னை முழுவதுமே மறந்து விட்டானோ என்று சோதிக்கும் எண்ணத்துடன் அவள் அவனுக்கு ஒரு தூது அனுப்பினாள். அவன் நோயின் விவரமறிந்து தான் அடைந்த துயரை வருணிக்கும் சொற்கள் கிடையாதென்று அதில் அவள் குறித்தாள். அதனுடன் ஒரு பாடலும் இணைத்தாள். 'தங்களைப்