பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(184) | |___

அப்பாத்துரையம் - 22

அத்துடன்

ஒரு

பாடலும் அனுப்பினான். அது பல

உட்பொருள்கள் சுட்டுவதாய், ஒரு சித்திரக் கவியாய் அமைந்தது.

'இறைவாரத்தின் மீது படர்ந்த வேலிப்பருத்தியின் பஞ்சில்

குறைவற ஒருகைக்குத்து எடுத்து என் தலையணை நிரப்பி யிராவிட்டால், சிறு பனித்துளியினளவு கூட இச் செய்திக்குச் சாக்கு இராது’

கடிதத்தை நீண்ட ஒரு நாணற்கழியில் கோத்து அதை அவனிடம் இரகசியமாகவே ஒப்படைக்கும்படி சிறுவனைப் பணித்தான். ஆனால் சிறுவன் போனபின் அவன் இச் சிறுசெயல்பற்றிக் கூடக் கவலைப்பட்டான். சிறுவன் கவனக்குறைவால் அது தவறி ஷோஷோ கையில் சிக்கிவிட்டால், அதனுக்கு முற்பட இடம் பெற்றவன் கெஞ்சியே என்பது அவனுக்குத் தெரிந்துவிடக்கூடும். சிறிதுநேரம் அமைந்து சிந்தித்தபின் கெஞ்சிக்கு இந்தக் கவலையும் குறைந்தது. ஷோஷோ கெஞ்சிவகையில் இத்தகைய நிகழ்ச்சியைப் பற்றிக் கூட மிகத் தவறாக நினைக்கமாட்டான் என்று அவன் தற்பெருமை கூறிற்று.

சிறுவன் கடிதத்தைக் கொடுக்கும்போது ஷோஷோ தொலைவிலேயே இருந்தான். கடிதம் அவளை ஒரு சிறிதும் புண்படுத்தாமலில்லை. ஆனால் அவன் தன்னை மறவாமல் நினைக்கவாவது செய்தானே அன்று சிறிது தன்னை ஆற்றிக் கொண்டாள். அவள் வேறொன்றும் பதிலாக வரையாமல் ஒரு பாடலை மட்டும் எழுதிச் சிறுவனிடம் நேரே கொடுத்தனுப்பி னாள்.இதுதவிர தனக்கு வேறு எதுவும் எழுத நேரம் இல்லை என்பதையே அதற்குரிய சாக்குப் போக்காக்கினாள். ‘உங்கள் அன்பாகிய காற்று மெல்ல ஒருசிறிதே வீசியதால், இறை வாரத்திலிருந்து எடுத்த பஞ்சினி கையுறைகூடத் துயர்ப்பட்டு இறுகிவிட்டது' என்ற கருத்தை அப்பாடல் குறித்தது. அது மிகவும் மோசமாக எழுதப்பட்டிருந்தது. அதை அணி செய்த சித்திரக் கோடுகளும் கொம்புகளும் தவறான முறையில் அமைந்திருந்தன. நடையும் குறைபாடுடையதாகவே இருந்தது. ஆயினும் அதுவே விளக்கொளியில் முதலிரவு கண்ட அம்முகத்தைக் கெஞ்சிக்கு நினைவூட்டப் போதியதாயிருந்தது.

அச்சமயத்தில் அவனுக்கு எதிரே அமர்ந்த பெண்ணோ நிமிர்ந்து உட்கார்ந்திருந்தாள். அவள் முகத்தின் உறுதிக் கிணங்க அவள் ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காதவளாகவே அமைந்தாள்.