பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192

||-

அப்பாத்துரையம் - 22

'இது யார் மனை?' என்று கெஞ்சி கேட்டான். மடத்துத் தலைவர் ஒருவர் அதில் ரண்டாண்டுகளாக வாழ்ந்து வந்ததாகக் கெஞ்சியின் ஆட்களில் ஒருவன் தெரிவித்தான். ஆனால் மடத்துத் தலைவர் பெயர் கூறியதும், கெஞ்சி வியப்புத் தெரிவித்தான். ‘ஆ, அவரை நான் நன்கு அறிவேன்' என்றான். இந்த உடையுடனும் இத்தனை துணைவருடனும் நான் அங்கே செல்லமுடியாது. அவர் காது கொடுத்துக் கேட்க மாட்டாரென்றே அவன் பேசிமுடிப்பதற்குள் சிங்காரமாக ஆடையணிந்த சிறுவர் சிறுமியர் சிலர் வீட்டிலிருந்து வெளிவந்தனர். படிமங்களுக்கும் வழிபாட்டு மேடைகளுக்கும் உரிய மலர்களை அவர்கள் சென்று கொய்தனர். 'அவர்களிடையே பெண்கள்கூட இருக்கிறார்களே! திருத்தந்தை பெண்களை வளர்க்க எண்ணுவார் என்று கூறுவதற்கில்லை. அவர்கள் யாராயிருக்கக்கூடும்?' என்றான் கெஞ்சி. அவன் பணியாட்களில் ஒருவன் இதையறியக் குன்றுமேட்டில் இறங்கிச் சிறிது தூரம் சென்று அருகிலிருந்து பார்த்து வந்தான். ‘ஆம், அவர்களில் மிக அழகான பெண்கள் பலர் இருக்கிறார்கள். சிலர் குழந்தைகள், சிலர் வளர்ந்தவர்கள்' என்று திரும்பியதும் தெரிவித்தான்.

காலையின் பெரும்பகுதியையும் கெஞ்சி தன் உடல் நலம்பேணுவதில் கழித்தான். இதற்கான நடைமுறைகள் முடிவுற்றபின், வெப்புவலி வழக்கமாக வரும் நேரத்துக்கு அஞ்சி, அதிலிருந்து மனம் திருப்பும் வகையில் நண்பர்கள் கெஞ்சியைக் குன்றுமேடு கடந்து சிறிது தொலை இட்டுச் சென்று வந்தனர். அங்கே மலையின் ஒரு பகுதியிலிருந்து கீழே தலைநகரின் தோற்றத்தைத் தெளிவாகக் காண முடிந்தது. அக்காட்சி கண்டு கெஞ்சி வியப்பும் களிப்பும் அடைந்தான். “ஆகா, என்ன அழகுச் சித்திரம்? மங்கலான தூரப் பார்வையில் நாற்புறமும் நெடுந்தொலை சூழ்ந்திருக்கும் காடுகளின் பளபளப்புடன் கலந்து நகரம் எவ்வளவு இரமணீயமாயிருக்கிறது? இத்தகைய இடத்தில் வாழ்பவர்களை ஒருகணம்கூடத் துன்பத்தின் நிழல் அணுகமுடியாது!' என்றான். கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் இப்புகழ்மேல் புகழ் அடுக்கினான். 'இது பெரியதன்று. மற்ற மாகாணங்களிலுள்ள மலைகளையும் ஏரிகளையும் மட்டும் நீங்கள் சென்று காண முடிந்தால், இங்கே நீங்கள் பாராட்டுவதை