பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

193

விடப் பன்மடங்காக அவற்றைப் பாராட்ட வேண்டி வரும்' என்றான்.

முதலில் அவன் ஃவூஜி மலைபோன்ற பலகாட்சிகளைப் பற்றிக்கூறிப் பின் மேற்குப் பகுதியிலுள்ள இனிய கடற்கரைகள், அழகிய வளைகுடாக்கள், விரிகுடாக்கள் ஆகியவற்றைப் பற்றி வருணித்தான். இந்த வருணனைகளிடையே வெப்புவலிக்குரிய நேரம் வந்து சென்றுவிட்டதைக்கூடக் கெஞ்சி உணரவில்லை. வருணித்த அன்பன் மேலும் தொடர்ந்து வருணித்துக் கொண்டே சென்றான்.

'அதோ நம் அருகாமையில் தெரிவது ஹரிமாவிலுள்ள அகாஷி விரிகுடா ஆகும். அதை நன்கு குறித்து நோக்குங்கள். பார்வைக்கு அது அவ்வளவு ஓய்ந்தொதுங்கிய இடமல்லதான். ஆயினும் அங்கே சென்றுவிட்டால் நீங்கள் ஒரே நீர்ப்பரப்பின் எல்லையற்ற பாழ் தவிர வேறு எதுவும் காணமாட்டீர்கள். அங்கு நீங்கள் உணரும் தனிமை புதுமையையுடையது, விசித்திரமானது.'

'இந்த இடத்தில்தான் முன்பு மாகாண ஆட்சி முதல்வராயிருந்த ஒரு புறநிலைப் புரோகிதரின் மகள் வாழ்கிறாள். மட்டுமீறிய அகல்விரிவும், எதிர்பாராத ஒய்யாரப் பகட்டும் உடைய ஒரு மாளிகையில் அவள் தனித்துத் தலைவியாயிருந்து வருகிறாள். மாளிகைக்கு உரியவர் ஒரு முதலமைச்சர் குடிமரபில் வந்தவர். உலகில் மிக உயர்ந்த உச்சப் பதவி வகிப்பார் என்று எதிர்பார்க்கப் பட்டவர். ஆயினும் அவர் ஒரு தனிப் பண்புடையவர், சமுதாயத்துடன் எளிதில் பழகாதவர். ஆகவே அவர் சிறிது காலம் அரண்மனைக் கடற்படையில் ஒரு பணியாளராய் இருந்தபின் ஹரிமா மாகாணத் தலைமை யேற்று அங்கேயே சென்றார். ஆனால் இங்கும் அவர் மாகாண மக்களுடன் மோதிக் கொண்டார் மக்கள் தம்மை மோசமாக நடத்தியதனால் தலைநகருக்கே திரும்பிவிடப் போவதாக அறிவித்தார். ஆனால் அவர் போனது தலை நகரத்துக்கல்ல; உலகவாழ்விலிருந்தே ஒதுங்கி அவர் தலையை மொட்டை

யடித்துப் புரோகிதரானார்.

வழக்கமாகத் திருக்குடில் அமைப்பவர்களைப் போல அவர் ஒதுங்கிய மலைப் பகுதியை நாடாமல், கடற்கரையையே