பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(194) || — —

அப்பாத்துரையம் - 22

தேர்ந்தெடுத்தார். இது உங்களுக்கு முதலில் முற்றிலும் பொருத்தமற்ற புதுமையாகத் தோற்றலாம். ஆனால் அம்மாகாணத்தில் மலைப் பகுதி மற்ற இடத்து மலைப் பகுதிகளைக் காட்டிலும் கிளர்ச்சியற்றதாகவும் தன்னந்தனி மையாகவும் உள்ளது. மிகப் பல துறவிகள் இங்கே மலையை நாடாமல் வேறு ஏதாவது இடங்களிலேயே தங்கள் இருப்பிடங் களை அமைக்கின்றனர். ஆட்சி துறந்த புரோகிதச் செல்வர் இந்த இரண்டு தன்மைகளுக்கும் இடைநிலைப்பட்ட

மாகவே கடற்கரையைத் தேர்ந்தெடுத்திருந்தார்.

சமரச

'ஒரு தடவை நான் ஹரிமா மாகாணத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர் திருமனையைக் காணும் சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்திக் கொண்டேன். எதிர்பாராத முறையில், நகரத்தில் மிக எளிய வாழ்வு வாழ்ந்த அவர் இங்கே மிக ஒய்யாரமான, பகட்டாரவாரமான முறையில் பெரிய மாளிகை கட்டி வாழ்ந்தது கண்டேன். மாகாண ஆட்சிப் பொறுப்பின் தொல்லைகளிலிருந்து இவ்வாறு விடுபட்ட நிலையில், அவர் தம் முன்னைய எளிமைக்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து இப்போது ஆரவார வாழ்வின் இன்பம் நுகரக் கருதினார் என்றே தோற்றிற்று. இவ்வளவு ஆரவாரச் சூழல்களுக்கிடையிலும் அவர் வரப்போகும் உலகுக்குத் தம்மைச் சித்தம் செய்வதில் குறை வைக்கவில்லை. ஏனெனில் அவர் வாழ்வு மிகவும் கடுமையாகவும் சமயக் கண்டிப்புமிக்க தாகவும் இருந்தது.'

'அவர் மகளைப் பற்றியல்லவா பேச்சுத் தொடங் கினீர்கள்!' என்று கெஞ்சி நினைவூட்டினான்.

அவன் மேலும் தொடர்ந்தான்.

'அவள் மட்டான இனிய தோற்றமுடையவள். அவள் அறிவும் புறக்கணிக்கத் தக்கதன்று. மாகாணத்தின் பல ஆட்சி முதல்வர்களும் பணி முதல்வர்களும் அவள் மீது விருப்புற்று அவளை மணஞ் செய்து கொள்ள வேண்டினர். ஆனால் அவள் தந்தை அவர்கள் அனைவரையுமே மறுத்தனுப்பிவிட்டார். தம்மளவில் அவர் உலகப்புகழ் ஆரவாரத்தை விரும்பவில்லை யானாலும், தம் அன்பு முழுமைக்குமுரிய இந்த ஒரே குழந்தைக்குத் தம் எளிமையை மங்க வைத்துவிடும் பெருமை யையே நாடினாரென்று தோற்றுகிறது. இது காரணமாக, அவள்