பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

197

அவன் துணைவர்களில் மற்ற யாவரும் துறவியின் குகைக்குத் திரும்பி விட்டனர். கோரெமிட்சு மட்டும் அவனுடன் இருந்தான்.மேற்குச் சிறையில் அவன் நின்ற பக்கம் ஒரு துறவுமாது வழிபாட்டில் ஆழ்ந்திருந்தாள். திரை பாதி திறந்திருந்தது. அதன் வழியாகத் துறவுமாறு ஒரு படிமத்தின் மீது மலர்கள் அருச்சித்து வந்தாளென்று தெரியவந்தது. அவளருகே நடுத் தூணில் சார்ந்து அருகிலுள்ள ஒரு கோக்காலி மீது ஒரு சூத்திரப் புத்தகத்துடன் இன்னொரு துறவு நங்கை உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

அவள் உரக்க வாசித்துக் கொண்டிருந்தாள். முகத்தில் எல்லையற்ற சோகம் படர்ந்திருந்தது. அவளுக்கு வயது நாற்பது இருக்கும் என்று தோற்றிற்று. அவள் பொதுநிலை மக்களில் ஒருத்தியல்லள் என்பதை அவள் தோற்றம் நன்கு எடுத்துக் காட்டிற்று. அவள் மேனி வெண்மையும் மென்மையும் வாய்ந்ததாயிருந்தது. மிகமெலிந்தாலும் அவள் கன்னங்களில் இன்னும் உருட்சியும் திரட்சியும் கெடாதிருந்தன. அவள் தலைமுடி கண்களின் மட்டத்துக்கு மிகவும் கட்டையாகத் தறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிலையிலும் அதன் அருகுகள் நுண்ணயமும் மென்மையும் உடையவையாய் இருந்தன. துறவு வேடத்துக்குரிய இந்த நிலையில் கூடக் கத்தரிக்கப்படாத முழுநீளக் கூந்தலையிட இந்தக் கத்தரித்த முடியே அவள் நாகரிகப் பண்பையும் புதுமைப் பாணியையும் நன்றாக எடுத்துக் காட்டிற்று.

அவளைப் போலவே நல்ல நிலையிலுள்ள இரண்டு பணிப் பெண்கள் அவளிடம் சேவை செய்தனர். அவள் இருந்த அறையிலிருந்து வெளியிலும், வெளியிலிருந்து அறைக்குள்ளும் பல சிறு பெண்கள் சென்று ஓடி விளையாடிக்

கொண்டிருந்தனர். அவர்களிடையே பத்து வயதுடைய சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் அறைக்குள் ஓடி வந்தாள். அச்சமயம் அவள் உள்ளே கெட்டிப் பொன்னிறமான விளிம்புடைய ஒரு வெள்ளை ஆடை அணிந்திருந்தாள்.

அவளை ஒத்த அழகுப் பிழம்பான ஒரு சிறுமியைத் தான் எங்குமே கண்டதில்லை. என்று கெஞ்சி நினைத்தான். வளர்ந்தால் அவள் எவ்வளவு பேரழகுடையவளாய்த் திகழ மாட்டாள்! அலையலையாகத் திரண்டு சுருண்ட அவள் முடிகள்