பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

(199

தடவை சொல்லி யிருக்கிறேன்? அது கொடுமையல்லவா? சரி, வா இப்படி!' என்றாள்.

சிறுமி அவள் அருகில் சென்று அமர்ந்தாள்.

அவள் முகத் தோற்றம் மிகவும் பொலிவுடையதாயிருந்தது. சிறப்பாக அவள் தலை முடி மேகத்திரள்போல் அடர்ந்து வளர்ந்து இரு கன்னங்களையும் வந்து மறைப்பவை போலப் புரண்டன. குழந்தை இயல்பு வழாது அதை அவள் ஓயாது பின்புறமாகத் தள்ளிக் கொண்டு வந்த நேர்த்தி கண் கொள்ளாக் கவர்ச்சி தந்தது. அவளையே கூர்ந்து கவனித்து, வளர்ந்த பின் அவள் எப்படி இருப்பாள் என்று கெஞ்சி தனக்குள் உருவகம் செய்து பார்க்க முயன்றான். அச்சமயம் அவனுக்குத் திடீரென்று ஓர் உண்மை புலப்பட்டது. தன் முழு உயிராற்றலுடனும்தான் நேசிக்கும் ஒருவருடன் இளவரசி புஜித்சு போவுடன் அவளுக்கிருந்த ஒப்புமை பெரிதாயிருந்தது. இதுகாண அவன் உள்ளூரக் கனிவுற்றுக் கண்கலங்கினான்.

துறவுநங்கை சிறுமியின் முடி கோதிக் கொண்டே மேலும் பேசினாள். 'நல்ல அழகான தலைமுடி தான். ஆனால் நீ அதைக் கோதி முடிக்க விடாமல் அடம் பிடிக்கிறாய்! நீ இன்னும் பச்சைக் குழந்தைப் புத்தியுடன் இருப்பது பற்றித் தான் கவலையாயிருக்கிறது. உன் வயதிலுள்ள மற்றப் பிள்ளைகள் இப்படியா இருக்கிறார்கள்? உன் அருமை அம்மா அவள் தாய் இறக்கும்போது பன்னிரண்டு வயதாகத்தான் இருந்தாள். ஆனால் அந்த வயதிலேயே அவள் தன் காரியங்கள் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொண்டாள். ஆனால் இந்தக் கணம் நான் போய்விட்டால், நீ எப்படி வாழப் போகிறாயோ, எனக்குத் தெரியாது' என்று கூறி அவள் அழுதாள்.

தொலைவிலிருந்து இதைக் கேட்டிருந்த கெஞ்சிக்குக் கூடத் துயரம் பொங்கி எழுந்தது.

குழந்தை மனப்பான்மையை ஒரு கணம் விட்டுவிட்டுச் சிறுமி துறவு நங்கையின் முகத்தைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள். அச்சமயம் அவள் தலை முடிகள் இரண்டு கரிய அலைத்திரள்கள் போல் இரண்டு கன்னங்களிலும் வந்து கவிந்தன. அவளை அன்புப் பாசத்துடன் கண் குளிரப் பார்த்துத் துறவு நங்கை ஒரு பாடலைப் பாடினாள்.