பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

||---

அப்பாத்துரையம் - 22

நிலையிலேயே, அவர் தங்களை அழைக்க இங்கே நேரே வரவில்லை. ஆயினும் தங்களிடம் இது தெரிவிக்கும்படி என் தலைவர் கட்டளையிட்டிருக்கிறார். எங்கள் மனை எளியதாயிருந் தாலும், தங்களுக்கு எங்களால் வைக்கோற் படுக்கையாவது அன்புடன் அளிக்க முடியும். எங்கள் மனைக்கு வருகை தராமலே நீங்கள் செல்வதாயிருந்தால், நாங்கள் மிகவும் வருத்த மடைவோம்' என்றார் அவர்.

கெஞ்சி உள்ளிருந்தே மறுமொழிகூறி அனுப்பினான்.

'பத்து நாட்களாக நான் கொடிய வெப்புவலியால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறேன். அது திரும்பத் திரும்ப வருவதனால் நான் செய்வதறியாமல் திகைத்தேன். அச்சமயம் இம்மலையிலிருக்கும் துறவியிடம் வரும்படி யாரோ ஒருவர் அறிவுரை தந்தனர். நான் இங்கே வந்ததன் நோக்கம் இதுவே. ஆனால் ஒரு சாதாரண மாயாவியை நான் காணவந்திருந்தால், இவ்வளவு ஒளிவுமறைவு தேவைப்பட்டிராது. மலைத்துறவியின் புகழ் மிகப்பெரிது. என்போன்ற ஒருவர் அவரை அடுத்துக் குணம்பெற வில்லையானால், அப்புகழுக்கு அவப்பெயர் உண்டாகும். இதை எண்ணியே நான் இந்த மாற்றுருவில் வந்தேன். இந்த விளக்கம் கூறி என்னைத் துறவி மன்னிக்கும் படியும், குகைக்கு எழுந்தருளும்படி வேண்டுங்கள்' என்றான்.

இவ்வாறு வேண்டிக் கொள்ளப்பட்டபின் முதிய துறவி வருகை தந்தார்.

அவர் மீது கெஞ்சிக்கு மதிப்புமட்டுமன்றி அச்சமும் இருந்தது. ஏனெனில் துறவியானாலும் அவர் ஒரு பெரிய மேதை அரசியல் உலகிலேயே அவர் பெருமதிப்புடையவர். ஆகவே உருமாற்றத்திற்காக மேற்கொண்ட அவல ஆடையுடன் அவரை வரவேற்க அவன் துணியவில்லை.

தலைநகரை விட்டுத் தாம் ஒதுங்கிய மலைப்புறத்துக்கு வந்து துறவு மேற்கொண்டது வரையுள்ள தம் வாழ்க்கை விவரங்களை யெல்லாம் முதிய துறவி கெஞ்சியிடம் தெரிவித்தார். பின் தம்முடன் தம்மனைக்கு வந்து, தம் தோட்டத்திலுள்ள குளிர் நீருற்றைக் காணும்படி அழைத்தார். கெஞ்சி இணங்கினான்.