பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

கெஞ்சி தன் நிலையை மீண்டும் விளக்க முற்பட்டான்.

211

'எனக்குக் கிட்டிய தகவலில் தவறு எதுவும் இல்லை. விளக்க முற்பட்டான். நேர்மாறாக, இக்குழந்தை பற்றிய ஒவ்வொரு சிறு நுணுக்க விவரங்களையும் நான் நன்கு அறிவேன். ஆயினும் அவளிடம் நான் கொண்ட ஒத்துணர்வு மிகைப்படுத்தப்பட்ட தென்றோ, தவறான இடத்தில் செலுத்தப்பட்ட தென்றோ நீங்கள் நினைப்பதானால், நான் இது பற்றிக் குறிப்பிட்டது பற்றி மன்னிக்கக் கோருகிறேன்.” என்றான்.

மொத்தத்தில் தன் கோரிக்கை எவ்வளவு பொருந்தா முரண்பாடு உடையது என்பதைக் கெஞ்சி ஒரு சிறிதும் உணர முடியவில்லை. அவனை உணர வைக்க மேலும் முயல்வதில் அறஅணங்கும் எத்தகைய பயனும் காண முடியவில்லை. அத்துடன் துறவி இச்சமயம் திரும்பி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், 'எப்படியும் என் கோரிக்கைக்கு நீங்கள் உடனடியாக இணங்குவீர்கள் என்று நான் எண்ணியது கிடையாது. ஆயினும் விரைவில் நீங்களே அதனை வேறு கோணங்களிலிருந்து கண்டு உண்மை நிலை தெளிவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு' என்று கூறியவாறு தட்டியின் திறப்பை மீண்டும் மூடி விட்டுக் கெஞ்சி நடந்தான்.

இரவு கிட்டத்தட்டக் கழிந்தது. அருகிலுள்ள ஒரு கோயிலில் ‘அறமலர்' என்னும் வினை முறை நடத்தப்பட்டது. வினைவலார்களின் குரல்கள் ஒருமிக்க 'உய்தி முறை'யை உருவிட்டுக் கொண்டிருந்தன. அந்த அரவம் மலைக் காற்றில் கானாற்றின் அருவி ஓசையுடன் சேர்ந்து மிதந்து வந்தது.

‘என் கனவிடையே மலங்காற்றின் ஓர் அலை வீச்சினால் திடுக்கிட்டெழுந்து அருவி நீர் ஓசையைக் கேட்டேன். அதன் இசையின் இனிமை உணர்ந்து நான் கண்ணீர் மல்கினேன்' என்று கெஞ்சி துறவியிடம் ரவில் தான் பெற்ற அனுபவத்தை எடுத்துரைத்தான்.

'நாள் தோறும் நான் கலத்தில் நீர் ஏந்தி நிறைத்துக் கொண்டு வரும் நீர்வீழ்ச்சிதான் அது. அது கண்டு நான் வியப்படையவோ, மகிழவோ, திடுக்கிடவோ வழியில்லை' என்றார் துறவி. கூறியதற்குப் பின் விளக்கம் கூறுபவர் போல,