பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

212) || __ __

அப்பாத்துரையம் - 22

அது எனக்குப் பழகிப் போய் விட்டது என்று மழுப்பினார்.

பின்னால் அதை

காலை வானை அடர்த்தியான பனிப்படலம் மறைத்துக் கொண்டிருந்தது. அதன் திரையிடையே மலைப்பறவைகளின் கலகலப்புக்கூட மிக அடங்கிய குரலாகவே கேட்டது.மலர்களும் மலர்ச்செடி கொடிகளும் அங்கே காடாகக் கிடந்தன. அவற்றின் பெயர்களோ வகைகளோ கூடக் கெஞ்சிக்குத் தெரியாதவை. அவை பாறைகளுக்கே பூ வேலை செய்த ஆடை போர்த்தது போன்ற தோற்றம் அளித்தன. மலைச் சரிவுகளில் மான்கள் அவ்வப்போது மென்னடை போட்டும், அவ்வப்போது துள்ளிக் குதித்தும் பாய்ந்தும் செல்வது கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. அவற்றைப் பார்க்கும் மகிழ்ச்சியில் கெஞ்சிக்கிருந்த நோயின் கடைசித் தடம் கூட அகல்வது போலத் தோற்றிற்று'

துறவியின் கைகால்கள் முற்றிலும் தளர்ச்சியுற்றுக் கிட்டத்தட்டச் செயலற்றே யிருந்தன. ஆயினும் எப்படியோ தட்டித் தடவி அவர் காவல் மந்திரத்தின் முத்திரைகளைத் திறம்பட முடித்தார். அவர் முதுமைக் குரல் கரகரத்துத் தடுமாறினாலும், மந்திர வாசகங்களைக் கம்பீர நாதத்துடனும் உள்ளார்வத்துடனுமே வாசித்தார்.

கெஞ்சியின் நண்பர்கள் பலர் இச்சமயம் அவனை வந்து கண்டு, அவன் நலமடைந்தது பற்றி மகிழ்ந்து அவனைப் பாராட்டினர்.அவர்களிடையே அரண்மனைத் தூதன் ஒருவனும் இருந்தான். கீழ்புறக் குடிசைக்குரிய துறவியும் இச்சமயம் வந்து விசித்திரத் தோற்றமுடைய ஒரு வேரை அவனுக்குப் பரிசாக அளித்தார். அதை எடுப்பதற்காக அவர் காலையில் கானாற்றின் ஆழ்கெவியிலேயே இறங்கிச் சென்றிருந்தார். மேலும் கெஞ்சியுடன் சென்று வழியனுப்ப முடியாமைக்கு மன்னிக்கும் படியும் அவர் கேட்டுக்கொண்டார். 'அவ்வாறு செய்வது எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சி தந்திருக்கும். ஆனால்

நான்

மேற்கொண்டிருக்கும் நோன்பு அம்மகிழ்ச்சியிலிருந்து என்னைத் தடுக்கிறது. இந்தஆண்டு முடிவுவரை அந்த நோன்பு நீடிக்க வேண்டும்!-' இவ்வாறு கூறி அவர் விடை கொள்ளலானார். விடை கொள்ளும் பிரியா ஆர்வம் குறித்த குடிகலம் ஒன்றும் அவர் பிரிவுப் பரிசாக நல்கினார்.