பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

மாலை அரையிரு ளாயினும் மென்மலரை

மேலை இரவில் விழிகுளிரக் கண்டேன். இன்று ஆலித்தடரும் பனித்திரை கண்மறைப்ப

மாலுற் றுழன்று மறுகினேன் என்கொலோ?

(215

துறவு நங்கை உவமையையே தொடர்ந்து மறுமொழி அனுப்பினாள்.

செம்மலர் காணாது செல்லும் உங்கள் மனவருத்தம் எம்மா அளவினது என்று மதிப்பிடற்கே

அம்மா பனிதுருவி வானோக்கி வாழ்வன்யான்'!

என்று அவள் எதிர் பாடல் அனுப்பினாள். பாடல் உயர் குடிக்கேயுரிய அரும்பண்புகளுடன் குறிப்பிடத்தக்க சிறப்புடைய தாயிருந்தது. கையெழுத்து அழகாகவும் நடை செயற்கை யணி களில்லாமல் இயல்பான அழகுநயமுடைய தாகவும் இருந்தது.

கெஞ்சியின் ஊர்தி புறப்பட ஆயத்தமாயிருந்த சமயம் நெடுமாடத்திலிருந்து பல இள நன்மக்கள் எதிர் வந்து குழுமினர். 'நீங்கள் வந்து இவ்வளவு நாளாகியும் உங்களைப் பற்றிய செய்தி எதுவும் அறியாமல் கவலையுடன் புறப்பட்டு வந்தோம். இப்போது உங்களுக்கு வழித்துணைவராக வர விழைகிறோம்' என்றார்கள். அவர்களிடையே தோ நோ சூஜோ, சச்சுபென் ஆகியோரும் வேறு பல உயர்குடிப் பெரு மக்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் இளவரசன் மீது கொண்ட அன்பின் காரணமாகத் தாமே விரைந்து வந்திருந்தனர்.அவர்கள் உருக்கமாகத் தம் பிரிவுத் துயரைத் தெரிவித்துக் கொண்டார்கள். 'உங்களுக்குத் துணைவராயிருப்பது தவிர வேறு எதுவும் நாங்கள் விரும்பவில்லை. அப்படியிருக்க நீங்கள் எங்களை விட்டு வந்தது தகாது' என்று கெஞ்சியை அவர்கள் கடிந்து கொண்டனர். மேலும், அவர்கள் நட்பாடிப் பேசினர். 'இப்போது இவ்வளவு தூரம் வந்து விட்டோம். இனி ஒரு சிறிதாவது இந்த மலர்க் காமரங்களின் நிழலில் தங்காமல் போவது நன்றாயிராது' என்றனர்.

அவர்கள் எல்லாரும் உயரமான ஒரு பாறையின் நிழலில் பாசிப்புல் படர்ந்த நிலத்தின் மீது வரிசையாக உட்கார்ந்தார்கள்.