பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(216) || __ __ .

அப்பாத்துரையம் - 22

மண்ணால் செய்த முரட்டுத் தேறல் கலம் ஒன்றைக் கைக்குக் கை மாற்றி இனிது உரையாடிக் கொண்டே அவர்கள் தேறல் பருகினார்கள். அவர்கள் அருகே ஓடை ஒன்று பாறை மீது குதித்தோடி அருவியாக விழுந்தது. தோ நோ சூஜோ தன் மடியில் செருகியிருந்த குழலெடுத்து அதில் சில பண்கள் வாசித்தான். சச்சு பென் தன் விசிறியினால் தட்டித் தாளமிட்டுக் கொண்டே ‘தோயோராத் திருக்கோவில்' என்ற பாடலைப் பாடினான்.

கெஞ்சியை அழைத்துப் போக வந்திருந்த இளைஞர்கள் பலரும் பெரும் புகழ்வாய்ந்த உயர் குடிச் செல்வர்கள். ஆயினும் கெஞ்சி அவர்களிடையே அமர்ந்திருந்தபோது எல்லார் கண்களும் அவனையே நோக்கி இருந்தன. எவர் பார்வையும் வேறு பக்கம் சாயவில்லை. துயரார்ந்த முகத்துடன் கெஞ்சி பாறை மீது சாய்ந்திருந்த காட்சி அத்தனை சிறப்புடையார்கள் கண்களையும் அவள் பக்கமே ஈர்ப்பதாயிருந்தது.

கெஞ்சியின் துணைவரில் ஒருவன் இப்போது நாணலால் செய்தபுல்லாங்குழல் வாசித்தான். மற்றொருவன் வாய்க்கருவி வாசித்தான். இதற்கிடையே முதிய துறவி மனைக்குள் சென்று ஒரு யாழ் எடுத்து வந்து கெஞ்சியின் கையில் கொடுத்து, 'மலைப் பறவைகள் மகிழ்வுறும் வண்ணம்' ஏதேனும் வாசிக்கும்படி வேண்டினார். தான் அதற்கான மனநிலையுடனில்லையென்று கெஞ்சி கூறியும் அவர் வலியுறுத்தவே, அவன் இணங்கினான். அவன் வாசிப்பு உண்மையிலே எவரும் போற்றத்தக்கதாகவே இருந்தது. அதன்பின் அனைவரும் திரும்பிச் செல்ல எழுந் தார்கள்.

-

கெஞ்சி இவ்வளவு குறுகிய காலத்தில் வந்து செல்வது பற்றித் துறவிகளில் கடைசிப்படித் துறவி வரை எல்லோரும்-புதுப் பயிற்சியாளரும்கூட மிகவும் மனவருத்தமடைந்தார்கள். பலர் கண்ணீர் உகுத்தனர். மனைக்குள் அடைபட்டுக் கிடந்த முதுமை வாய்ந்த துறவு நங்கைகூட, 'ஒரே ஒரு தடவை கண்மூடி விழிக்கும் நேரம் தானே பார்த்தோம், இனி எப்போதேனும் திரும்பப் பார்க்க நேருமோ?' என்றெண்ணி மனங்கசிந்தாள். பழிசார்ந்த இந்தக் காலங்களில் இளவரசனை ஒத்த புண்ணியாத்மாக்களைக் காணப்பெறும் தகுதி இந்த உதயசூரியன் தேசத்துக்கு