பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

217

(ஜப்பானுக்கு) அடிக்கடி ஏற்பட முடியாது என்று கூறித் துறவி கண்கலங்கினார். சின்னஞ்சிறு சிறுமிக்குக்கூட இளவரசனிடம் மிகவும் பற்று இருந்தது. தன் தந்தையை விட மிகச் சிறந்த திருவாளன் அவன் என்று அவள் தன் மழலை மொழியில் கருத்துரைத்தாள். அவள் வளர்ப்புத் தாய் இது கேட்டுக் கேலி செய்தாள். 'ஏன், அப்படியானால் தந்தையின் பிள்ளையாய் இருப்பதற்குப் பதில் அவர் பிள்ளையாய் விடுவது தானே!' என்றாள். சூதறியாத பிள்ளை இதற்கும் தலையாட்டிற்று.அதுவும் ஒரு நல்லதிட்டம்தான் என்று அவள் கருதினாள். அவளிடம் இருந்த படங்களில் மிக நல்லாடையணியுடைய ஓர் உருவத்தின் கீழ் அது முதல் ‘இளவரசன் கெஞ்சி' என்ற பெயர் தீட்டப்ப ட்டிருந்தது! அவள் பொம்மைகளில் மிக அழகிய பொம்மையும் அப்பெயர் தாங்கிற்று!

தலைநகருக்குத் திரும்பியதும் கெஞ்சி நேரே அரண்மனை சென்றான். சென்ற இரண்டு நாட்களின் ஆர்வ அனுபவங்களை யெல்லாம் தன் தந்தையிடம் கூறினான். சக்கரவர்த்தி அவன் ஏக்கற்ற தோற்றம் கண்டு மிகவும் கவலைப்பட்டார். துறவியின் மந்திர ஆற்றல்பற்றி அவர் கேள்விமேல் கேள்விகள் கேட்டார். கெஞ்சி அவற்றுக்கெல்லாம் நுணுக்க விரிவுடன் மறுமொழி பகர்ந்தான். அதன்மீது சக்கரவர்த்தி தன் கருத்துரை கூறினார். 'நெடுநாட்களுக்கு முன்பே அவர் தலைமை மந்திர வல்லுநர் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவர் சேவைகள் எப்போதுமே அரும்பெரும் பயன் தந்திருக்கின்றன. ஆயினும் என்ன காரணத்தினாலோ அவை வெளிப்படையான பொதுப் பாராட்டை இன்னும் பெறவில்லை' என்றார்.

க் கருத்துடன் அவர் உடனே ஓர் ஆணை பிறப்பித்தார்.

சக்கரவர்த்தியின் திருமுன்னிலையிலிருந்து திரும்பிய சமயம் கெஞ்சியை இடங்கை அமைச்சர் எதிரே வந்து சந்தித்தார். தம் மக்களுடன் மலைக்கு வந்து அவரை இட்டு வராமைக்கு அவர் மன்னிப்புக் கோரினார். 'நீங்கள் தனி மறைவாக அங்கே சென்றிருந்ததால் வெளிப்படையாக எதிர்கொண்டு அழைக்கப் படுவதை விரும்பியிருக்க மாட்டீர்க ளென்று கருதி இருந்து விட்டேன். இப்போது நீங்கள் என்னுடன் சிறிது காலம் இருந்து ஓய்வு கொள்வீர்கள் என்று அவாவுகிறேன். அதன்பின் உங்களை