பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




222

||-

அப்பாத்துரையம் - 22

என்ன என்ன இக்கட்டில் கொண்டு சிக்கவைக்குமோ?' என்று அவன் கவலைப்பட்டான்.

வ்வளவு தனிப்பட்ட சிறப்புத் தூதன் மூலம் கடிதம் அனுப்பப் பெற்ற துறவி மிகவும் மனங்கனிவுற்றார். ஆனால் அதை அவரிடம் கொடுத்தபின் கோரெமிட்சு துறவு நங்கையைத் தேடிச் சென்றான். தலைவன் அவனிடம் சொல்லி யனுப்பியதை அவன் கூறியதுடனன்றி, அவனைப் பற்றிய பல தகவல்களும் அவளுக்குத் தெரியப்படுத்தினான். இயல்பாக அவன் பெரும் பேச்சுக்காரன். ஆகவே பேசிக் கொண்டேயிருந்தான். இடையிடையே சாதகமான பல செய்திகளையும் கூற வாய்ப்பு நாடினான்.ஆனால் அத்தனையும் பேசி முடிந்த பின்னும் அவள் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இவ்வளவு சின்னஞ்சிறு குழந்தையிடம் கெஞ்சிக்கு எப்படி அத்தனை அக்கறை ஏற்பட்ட தென்பதை முன்போலவே அவளால் அறியக்கூடவில்லை.

அவன் கடிதம் மிகவும் பாசப் பரிவுடையதாகவே இருந்தது. ஒவ்வோர் எழுத்தெழுத்தாகச் சிறுமி எழுதுவது பற்றித் துறவு நங்கை முன்பு அவனுக்குத் தெரிவித்திருந்தாள். அந்தக் கையெழுத்தின் மாதிரியையே தான் காண விரும்புவதாக அவன் குறித்திருந்தான்.முன்போலவே ஒரு பாடலையும் உள்ளடக்கமாக அனுப்பியிருந்தான்.

‘நிலையற்ற விளையாட்டு நினைவென்றன் நோக்கமென

மலையுற்ற சுனைநிழல்தா னோ உனக்கு மெல்லமெல்லக் குலவிற்று? கூறாய் என் குன்றாடுமென் மலரே!' அவள் அதற்கு எதிர்பாடல் வரைந்தனுப்பினாள்.

‘சுனையதன் நீர் மொண்ட சிலர் தொல்லைமிக உற்றார் பினையுமது வாமோ? இஃதுரைத்திடு மோ நிழலே!'

இப்பாடலுடன் வாய்மொழியாகவும் அவள் சில செய்திகள் கூறியனுப்பினாள். விரைவில் தான் தலைநகருக்கு வருவதாக இருந்ததனால், அங்கே வந்தபின் செய்தி தெரிவிப்பதாகக் கூறினாள்.

இத் தகவல் கெஞ்சிக்குக் கிளர்ச்சி யூட்டுவதாயிருந்தது.