பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 22

224 ||_ ஆனால் கனவுபோலத் தோற்றும் இந்த இரவு நீண்டு, இப்படியே இந்தக் கனவில் நாம் முழுதும் மறைந்து போய் விடக்கூடாதா?' என்று அவன் ஏங்கினான். எனினும் அவள் ஏக்கம் வேறு திசையிலிருந்தது.

‘மீளாத்துயிலில் நான் ஒளிந்து மறைவதாயிருந்தால்கூட, என் மீளாப்பழி நாவிலிருந்து நாவுக்கு இந்த உலகில் நீடிக்குமே!’ என்றாள் அவள். அச்சம், கழிவிரக்கம் ஆகிய திடீர் உணர்ச் சிகளில் அவள் சிக்கியது காரணமற்றதல்ல என்றே அவனும் கருதினான்.

அவன் போகும்போது தன் போர்வை முதலியவற்றை மறந்துவிட்டுச் சென்றிருந்தான். தோழி ஓமியோபு அவன் பின் ஓடிவந்து அவற்றை அவனிடம் தந்தாள்.

அன்று முழுவதும் அவன் படுக்கையில் கிடந்து பெரு வேதனைகளுக்கு இரையானான். அவன் ஒரு கடிகம் அனுப்பிப் பார்த்தான். ஆனால் அது திறவாமலே திருப்பியனுப்பப்பட்டது. இத்தகைய செய்திகள் இதற்குமுன் எத்தனையோ தடவைகள் நடந்திருந்தன. ஆனால் இப்போது இதனால் அவன் அடைந்த துன்பம் இரண்டு மூன்று நாட்கள் அவனை அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கவைத்தது.

தன்னிடம் மிகவும் ஆர்வங் கொண்ட சக்கரவர்த்தி தன்நிலை உசாவி அறிந்து, 'இப்போது என்ன புது இக்கட்டு நேர்ந்தது?' என்று கேட்டு விடுவாரோ என்று அவன் ஓயாது நடுங்கிக் கொண்டிருந்தான். அதே சமயம் தன் அழிவு முழுதும் நிறைவேறிற்றென்று உறுதியாக எண்ணிய புஜித்சுபோ முற்றிலும் கிளர்ச்சியற்றவளாய் மனச்சோர்வுற்றாள். அவள் உடல்நலம் நாளுக்குநாள் மோசமாயிற்று. அரண்மனைக்குத் தாமத மில்லாமல் வரும்படி சக்கரவர்த்தியிடமிருந்து இடைவிடாது கடிதங்கள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் அவளுக்குப் போகும் துணிவு வரவில்லை. நோயின் போக்கும் அவளுக்கு உள்ளூரக் கலக்கமளிப்பதாகவே இருந்தது. நாள் முழுதும் அவள் எதுவும் செய்யவில்லை. 'இனி என்னாவது' என்ற ஒரே சிந்தனையில் அவள் ஏங்கியிருந்தாள்.

கடுவேனில் தொடங்கியபின் அவள் படுக்கையை விட்டே நகரவில்லை. இப்போது மூன்று மாதங்களாகிவிட்டன. அவள்