பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




226

||-

அப்பாத்துரையம் - 22

அவனுக்கு அதன் பொருள் புரிந்துவிட்டது. இதுதான் கனவு குறித்த சறுக்கல் என்று கருதினான்.

உடனே

கழிவிரக்கம் அவன் உள்ளத்தில் கொந்தளித்தது. வேதனைத் தற்பழிப்புரைகளும் நீதி ஆய்வாராய்வுகளும் நிறைந்த நீண்ட கடிதம் ஒன்றை அவன் புஜித்சுபோவுக்கு எழுதினான். ஆனால் இத்தகைய கடிதம் இளவரசியின் கலக்கத்தை இன்னும் மிகைப்படுத்தவே உதவும் என்று கருதி ஓமியோபு அதைக் கொண்டுசெல்ல மறுத்தாள். ஓமியோபு தவிர வேறு நம்பகமான தூதர் இல்லாமையால் அவன் வாளா இருந்தான். இதுமுதல் அவனிடமிருந்து வரும் குறைகள் பழிப்புகள் சுட்டிய ஒன்றிரண்டு வரிகள் வருவதுகூட முழுவதும் நின்றுவிட்டது.

ஏழாவது மாதத்தில் இளவரசி அரண்மனைக்குத் திரும்பி வந்தாள். அவள் வருகையால் எல்லையிலா மகிழ்வடைந்த சக்கரவர்த்தி அவள்மீது தம் அன்பைப் பல வழிகளிலும் பொழிந்தார். அவள் உருவம் இப்போது அடைந்த நிறை பருமையும் முகத்தின் விளறிய மெலிவும்கூட அவளுக்குப் புதிய, ஈடிணையற்ற கவர்ச்சி தந்தன என்றே அவர் நினைத்தார். முன்போலவே இப்போதும் அவரது ஓய்வு நேரம் முழுவதும் அவளுடனேயே கழிந்தது.

இச்சமயம் பல அரண்மனைச் சிறப்பு விழாக்கள் நடைபெற்றன. கெஞ்சியின் பங்கு அவற்றில் ஓயாது தேவைப் பட்டது. சில சமயம் யாழ் எடுத்து வாசிக்கவும், சில சமயம் தந்தைக்கு வேண்டிய பிறஉதவிகள் செய்யவும் அவன் கோரப்பட்டான். இந்தத் தறுவாய்கள் ஒவ்வொன்றிலும் கலக்கமோ குழப்பமோ காட்டக்கூடாது என்று அவன் எவ்வளவு முயன்றாலும், பற்பல சமயங்களில் தன்நிலை தன்னைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று அவன் மிகவும் அஞ்சி அஞ்சி நடுங்கி வந்தான். அதே சமயம் இதே அச்சம் புஜித்சுபோவுக்கும் டைவிடாக் கவலை அளித்து வந்தது.

துறவு நங்கை இப்போது சிறிது உடல் தேறியதனால், தலைநகரிலேயே வந்து தங்கியிருந்தாள். அவள் எங்கே தங்கியிருந்தாள் என்பதை உசாவியறிந்து கெஞ்சி அவளுக்கு அவ்வப்போது கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். அவளிட