பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(228

||--

அப்பாத்துரையம் - 22

கூறியதே, மனையில் கலக்கமும் பரபரப்பும் ஏற்பட்டன. பல நாட்களாகவே மனைத்தலைவி மிக ஆபத்தான நிலையில் இருந்து வருவதனால், அவர்களை வரவேற்கும் நிலையில் இல்லை என்று வருத்தப்பட்டனர். ஆனால் அதே சமயம் அத்தகு உயர் விருந்தாளியைத் திருப்பியனுப்பவும் துணியாமல், அவர்கள் அவசர அவசரமாகத் தெற்குக்கூடத்தை ஒழுங்குபடுத்தி அவனை அதற்குள் வருவித்தனர். 'இந்த அந்தசந்தமற்ற அறைக்குள் உங்களை வரவேற்பதற்கு மன்னிக்கக் கோருகிறோம். இதை மதிப்பு வாய்ந்ததாக்க எங்களாலியன்ற யாவும் செய்துள்ளோம். தங்கள் திடீர் வருகையின் காரணத்தால் நாங்கள் மேற்கொண்ட இத்தகைய அவசர நடவடிக்கைக்கு எங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்' என்றனர் அவ் ஏவலர்கள்.

அத்தகைய அறையில் அவன் என்றும் கால்வைத்து அறியாதவன் என்பது உண்மையே. ஆனால் அவன் கவனம் இப்போது இத்தகைய செய்திகளில் இல்லை. அவன் தன் வருகைபற்றியே குறிப்பிட்டான்.

'இந்த மனைக்கு வரவேண்டுமென்று நீண்ட நாட்களாகவே விரும்பினேன். ஆனால் நான் அடிக்கடி கடித மூலம் தெரிவித்துக் கொண்ட ஒரு கோரிக்கை முழுதும் மறுதலிக்கப் பட்ட நிலையே என் ஊக்கம் கெடுத்தது. ஆயினும் உங்கள் தலைவியின் உடல்நிலை இப்படிச் சீர்கேடடைந்திருப்பது தெரிந்திருந்தா..... படுக்கையிலிருந்தே பதில் வந்தது.

‘தற்சமயம் என் மனம் தெளிவாகத்தான் இருக்கிறது. ஆயினும் எந்தக்கணமும் அதில் இருள்வந்து சூழலாம். ஆகவே என் இறுதிக் காலத்தில் என்னைப் பார்க்க வந்த தங்கள் பெருமித அன்புக்கு நான் இப்போதே ஆழ்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேரடியாகத் தங்களிடம் பேசமுடியாமைக்கு வருந்துகிறேன். என்னுடன் தாங்கள் அடிக்கடி வாதிட்ட செய்தியில் எக்காரணத்தாலாவது இதுவரை எத்தகைய மனமாற்றமும் அடையாவிட்டால், குறித்த சமயம் வரும்போது, தாராளமாக அவளைத் தம் இல்லப் பெண்டிரில் ஒருத்தியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவள்பற்றிய பெருங்கவலையுடன் தான் நான் அவளை விட்டுச் செல்கிறேன். உலகிலுள்ள ஒரு பொருளுடன் நான் கொண்டுள்ள இத்தகைய பாசம் நான் இது