பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

231

சென்றுள்ளாள். உங்கள் நல உசாவலை அவளிடம் உரியகாலம் வரும்முன் தெரிவிக்க வாய்ப்பு ஏற்பட்டால் கட்டாயம் தெரிவிப்பேன்' என்று அவள் எழுதியிருந்தாள்.

இதை வாசிக்கும் நேரம் கெஞ்சியின் கண்கள் கலங்கின.

இந்த இலையுதிர்காலத்து மாலை வேளைகளில் கெஞ்சியின் உள்ளம் ஓயாது கொந்தளித்துக் குமுறிற்று. அவன் வேறு ஒரு திசையில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தாலும், ஆழ்ந்த அவ் ஈடுபாட்டுக்குரிய ஆளுடன் சிறுமிக்கு இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக, அவளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஆவலும் மற்றொரு புறம் வளர்ந்து கொண்டே வந்தது. அவன் அவளை முதல் முதல் கண்ட மாலைப்போதையும், துறவுநங்கை அவளைப் பற்றி அச்சமயம் குறிப்பிட்ட பாடலையும் அவள் ஓயாது நினைத்துக் கொண்டிருந்தான். 'இளந்தளிரைப் பேணுபவர் இனி யாரோ?' என்று தொடங்கிய பாடலே

அது.

அவன் உள்ளத்தில் ஐயங்களும் எழுந்தன. அவள் என்றும் மகிழ்ச்சியளிப்பது உறுதி. ஆனால் தொடக்ககால அவா ஆர்வங்கள் அவளிடம் முழுதும் நிறைவேறாமல் போகக்கூடும். என்றாலும் இடர் துணிந்தாக வேண்டும். இடர்துணிபுக்கான தகுதி அவளுக்கு உண்டு. அவளைப் பற்றி அவன் இப்போது ஒரு பாடல் எழுதினான்.

‘மருநிலத்தே உருமிகுத்த செவ்விளவேர் நின்று

குருத்துயிரும் மெல்லிளம் புல்லிதழ் என்றன் கையில் திருத்தமுறக் காண்டகுநல் திருத்தகுநாள் என்றோ?'

பத்தாவது மாதம் செந்தழை விழாவை ஒட்டி சக்கரவர்த்தி ‘சுசக்குயின்' மாளிகைக்குச் செல்லவேண்டியிருந்தது. உயர்குடி இளைஞர்கள் அனைவரும் ஆடலில் பங்குகொள்ள இருந்தனர். இளவரசர், அரண்மனை இளைஞர், பெருமக்கள் ஆகிய வரிடையே கலைத்திறன் நிறைந்த முதல்தர மக்கள் ஒவ்வொரு விழாப்பகுதிக்கும் சக்கரவர்த்தியாலேயே நேரில் பொறுக்கி எடுக்கப்பட்டனர். மன்னுரிமை இளவரசர், அரசியல் அமைச்சர்கள் முதல் குடிமக்கள் வரை எல்லாரும் இவ்விழாவுக் கான ஒத்திகைகளிலும் பயிற்சிகளிலும் ஆழ்ந் திருந்தார்கள்.