பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

(235

மடிமீதே வந்து படுத்துக்கொள். என்னிடம் ஏதாவது பேச மாட்டாயா?' என்று மீண்டும் பாசமுடன் பேசினான் கெஞ்சி.

'பாருங்கள், என்ன பண்படாக் குழந்தை என்று பாருங்கள்' என்று கூறிச் சிறுமியை அவனிடம் தள்ளினாள் சோனகன். அவள் பேசாமல் அவன்பக்கம் நின்றாள். அவன் கைவிரல்கள் அவள் மென் கூந்தலைப்பின் சென்று தட்டிவிட்டன. அது அவள் ஆடைமீது கொத்துக் கொத்தாக விழுந்தது. அவள் தோள்களைச் சுற்றி அது ஆடையினுள் சிக்கிக் கொண்டது.

அவன் அவள் கையைத் தன் கையால் பற்றினான். ஆனால் பழக்கமில்லாத ஒருவர் தொட்டதுணர்ந்து அவள் உடனே கையை உதறிக் கொண்டு பெண்கள் அறைக்குள் பாய்ந் தோடினாள். 'கண்ணே, இப்படி என்னைக் கண்டு ஓடாதே!’ இப்போது உன் பாட்டி போனதால், நீ அவளுக்குப் பதில் என்னை நேசிக்க வேண்டும்' என்று கூறிக் கொண்டு அவளைக் கெஞ்சி பின்பற்றினான். 'இது சற்று மிகையாய்விட்டது, ஐயனே! இவ்வளவு சிறு குழந்தையிடம் இதெல்லாம் கூறலாமா? மேலும் தன்னை நேசிக்கும்படி ஒருவர் கட்டளையிடவா முடியும்?' என்று சோனகன் பிதற்றினாள்.

உடனடியாக முடியாது தான். ஆனால் மனம் வைத்துச் செயலாற்றும் இத்தகைய இடத்தில் நாட்பட நாட்பட என்னென்ன புதுமைகள் நடக்கின்றன என்று பின்னால் நீங்கள் காணலாம்' என்றாள் கெஞ்சி.

மழை கல்மழையாக ஆலங்கட்டிகளைப் பெய்து கொண்டிருந்தது. அது புயலார்ந்த பயங்கர இரவு. இந்த ஆளற்ற சோகநிழல் படர்ந்த பகுதியில் சிறுமியை இவ்விரவில் விட்டுச் செல்ல மனமில்லாதவனாகக் கெஞ்சி மறுகினான். இதையே அவளருகில் இருப்பதற்குச் சாக்காகக் கொண்டான். 'இடைத் தட்டிக் கதவை மூடிவிடுங்கள். இந்த அச்சந்தரும் இரவில் நான் இங்கேயே தங்கி இராக் காவலனாக இருக்கிறேன். எல்லாரும் என் அருகிலேயே வந்திருங்கள்' என்று அவன் பெண்டிரிடம் கூறினான். இத்துடன் நில்லாமல், இயல்பாக எதுவும் பழக்கப்பட்டுச் செய்பவன்போல, சிறுமியைத் தன் கையில் தூக்கி எடுத்துக்கொண்டு படுக்கைக்கு இட்டுச் சென்றான்.மெல்லியலார்