பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

9

சிறிதன்று. ஏனெனில், பெற்றோர் இருவரும் உயிருடனிருந்து, வருவாயின் வளம் ஒரு சிறிதும் குறைவுபடாத எத்தனையோ குடும்பங்களின் இளம்பெண்களுக்குக்கூட மாதரசி தன் புதல்விக்களித்த பயிற்சியில் ஒருபாதி கிட்டியதில்லை. ஆயினும், செல்வியின் வாழ்வு முழு வளம் காண்பதற்குத் தடையாக அவளுக்கு ஒரு பெருங்குறை இருந்தது.அவள்வாழ்விலும் வளர்ச்சியிலும் அக்கறை காட்டி, தன் செல்வாக்கினால் அவற்றை ஊக்கத்தக்க உறவினர் எவரும் நங்கைக்கு அமையவில்லை இதனால் வாழ்வின் மிக நெருக்கடியான நேரங்களிலெல்லாம், ஆறுதலுக்கோ அறிவுரைக்கோ கூட எவரும் இல்லாத நிலையில் நங்கையின் தாய் மாழ்கி மறுகநேர்ந்தது.

ம்

செல்வி புதுச் சீமாட்டியானபின், அவள் உரிய காலத்தில் ஓர் இளவரசனுக்குத் தாய் ஆனாள். முன் ஒருவாழ்விலே பேரரசர் குடும்பத்துடன் அவளுக்குத் தனிப்பட்ட ஏதாவது தொடர்பு இருந்திருக்குமோ, என்னவோ அவள் பெற்றெடுத்த இளவரசன் சிறந்த அழகிளஞ் செம்மலாக விளங்கினான். பேறுகாலத் தீட்டுநாட்கள் கழியும் வரை தந்தையாகிய சக்கரவர்த்திக்கு அவனைக் காணாதிருக்கப் பொறுக்கவில்லை. அந்நாட்களின் ஒவ்வொரு நாழிகையையும் அவர் ஓர் ஊழியாகக் கருதித் துடி துடித்தார், அந்நாட்கள் கழிந்தவுடன் இளவரசனைப் பேரவைக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால், அவனுக்கு முன்பே அவன் பேரழகு பற்றிய பெரும்புகழ் சக்கரவர்த்தியின் செவிகளில் சென்று எட்டியிருந்தது. எனினும், குழந்தை இளவரசனை நேரில் கண்டதே அப்புகழுரைகள் அவன் அழகுப் பேரொளியை ஒருசிறிதும் பெருக்கிக் கூறிவிடவில்லை என்பதை அவர் உணர்ந்து மகிழ்ந்தார். அவர் உள்ளம் உவகை பூத்து ஒளி வீசிற்று.

சக்கரவர்த்திக்கு ஏற்கனவே மூத்த ளவரசன் ஒருவன் இருந்தான். அவன் தாய் வலங்கை அமைச்சரின் புதல்வியான கோக்கிடன் சீமாட்டி. அம்முறையில் பேரரசுக்குரிய பட்டத்து இளவரசனாக எல்லாராலும் அவன் நன்மதிப்புடன் பாராட்டப்பட்டிருந்தான். ஆயினும் புதிய இளவரசனின் அந் சந்தமான உடல் வனப்பும் முகவொளியும் அவனிடம் இல்லை.