பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

11

பட்டத்து இளவரசியாக்கிவிடக்கூடும் என்றும் கருதினாள் ஆனால், உண்மை நிலை அவள் கருதியதற்கு நேர்மாறாகவே இருந்தது, குடி மதிப்பில் மட்டுமின்றி வரிசை முறையிலும் கோக்கிடன் சீமாட்டியே புதிய சீமாட்டிக்கு முற்பட்டவள். அவளிடமும் சக்கரவர்த்தி மனமார ஈடுபட்டிருந்தார். அத்தொடர்பின் சின்னங்களாக அவள் பெற்றிருந்த

குழந்தைகளும் பல இந்நிலையில் சக்கரவர்த்தியின் புத்துறவால் அவள் நிலை அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை. சக்கரவர்த்தி தான் அவள் விருப்பு வெறுப்புகள் கண்டு அப்புத்துறவின் வருங்கால நலம் பற்றி அஞ்ச வேண்டியவராயிருந்தார். தம்மளவில் புதிய சீமாட்டிக்கு அவர் எவ்வளவு உறுதியான ஆதரவு அளித்தாலும், அவளைத் தாழ்த்திப் பழிவாங்கக் காத்திருந்தவர் பலர் என்பதை அவர் உணராதவரல்ல. அத்துடன் அவளுக்கு அவர் அளித்த நன்மதிப்புகள் ஒன்றினாலும் அவள் மகிழ்ச்சியடையவில்லை. நேர்மாறாக அவை ஒவ்வொன்றும் அவளை மேன்மேலும் கடுந்துயர்களுக்கே ஆளாக்கிற்று. அவளது அவலச் சூழ்நிலையில் அந்த நன்மதிப்புகளே அவளை அச்சுறுத்தி வந்த கோரப்பகைகளையும் பெருக்கின.

மதிப்பும் இன்பமும் வேண்டாம் வாழ்வின் சிக்கல்களி லிருந்து விடுபட்டால் போதும் என்றாகி விட்டது சீமாட்டியின் நிலை!

சீமாட்டிக்குத் தங்குமிடமாக அளிக்கப்பட்டிருந்தது அரண்மனையின் பக்கமாளிகைகளில் ஒன்றாகிய கிரித்சுபோ. அங்கிருந்து சக்கரவர்த்தியின் தனிமாடத்துக்கும் சக்கரவர்த்தியின் தனிமாடத்திலிருந்து அங்கும் அவள் இரவு பகல் ஓய்வொழிவில்லாமல் போய்வர வேண்டிவந்தது. இது அவள் பகைவர்களைப் பெருக்கி அவர்கள்உள்ளங்களில் வன்மத்தை மேன்மேலும் தூண்டி வளர்க்கவும் இன்னல்களையும்

து

இடர்களையும் பெருக்கவுமே உதவின. ஏனெனில் அவ்வழி அரண்மனையைச்சுற்றி வளைந்து வளைந்து சென்றது. பல அரண்மனைச் சீமாட்டிகளின் வாயில் கடந்தும் பலர் நிலா முற்ற மாடங்களின் முன்னாகவும்அவள் செல்ல வேண்டியவளானாள். அந்நிலையில் அவளைப் பார்த்த கண்கள் அவள் மீது பொறாமை கொண்டு நெருப்பைக் கக்கிச் சீறாமலிருக்கமுடியவில்லை. பாதை