பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

"

13

அணிமைக் காலங்களில் கூட இவ்வளவு சீரிய நற்பிறப்புக்கு எப்படி இடமேற்பட்டதோ என்று மனந்திறந்து தம்வியப்பை ஒளிக்காது வெளியிட்டவர்கள் கூட உண்டு.

அவ்வாண்டு வேனிற் பருவத்துக்குள்ளாகச் சீமாட்டியின் வாழ்வில் துயர மேகங்கள் படர்ந்தன. அடிக்கடி அவள் தன் வீடு செல்ல இசைவு கோரினாள். ஆனால், இசைவு கிடைக்கவில்லை. ஓர் ஆண்டாக நிலைமை இவ்வாறே நீடித்தது. அவள்வேண்டு கோள்களுக் கெல்லாம் அவளுக்குச் சக்கரவர்த்தியிடமிருந்து கிடைத்த மறுமொழி ஒன்றுதான். 'இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துக்கொள்' என்று மட்டுமே அவர் கேட்டுக் கொண்டார். ஆயினும் அவள் நிலை நாளுக்கு நாள் மோச மாயிற்று. ஐந்தாறு நாட்கள் அவள் உடல் தொடர்ந்து தளர்ச்சியடைந்து நிலைமை முற்றியபின் சீமாட்டியின் தாய் தன் மகளுக்கு விடுதலை அளிக்கும் படி கண்ணீருடன் மன்றாடினாள். எங்கே தன் எதிரிகள் எதிர்பாராத வகையில் ஏதேனும் கேடு செய்து விடுவார்களோ என்று சீமாட்டி இப்போது கூட அஞ்சினாள். ஆகவே நோயுற்ற நிலையிலும் அவள் தன் மைந்தனை அரண்மனையிலேயே விட்டு விட்டு இரகசியமாக வெளியேறி விட ஏற்பாடுகள் தொடங்கினாள்.

தாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமாட்டியை அனுப்பிவிட வேண்டிய காலம் வந்து விட்டதென்று சக்கர வர்த்தியும் இப்போது கண்டார். அதே சமயம் 'போய்வருகிறேன்' என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் அவள் நழுவிச் செல்வதை அவரால் மனமாரப் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. எனவே, அவர் விரைந்து சென்றார். இப்போதும் அவள் உடல் மெலிந்து முகம் விளறியிருந்ததே தவிர, அவள் அழகோ கவர்ச்சியோ ஒரு சிறிதும் குறையவில்லை. அவள் அவரைக் கனிவுடன் நோக்கினாள். ஆனாலும் ஒன்றும் பேசவில்லை. அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று கூட அவருக்கு ஐயம் உண்டாயிற்று. அவள் உருவில் ஒளியிழந்த உயிர்ப்பதுமை ஒன்றுதான் கிடந்ததோ என்னும்படி அவள் தோற்றம் முற்றிலும் மங்கிப்போயிருந்தது; அதில் மகிழ்ச்சியின் தடத்தையே காணமுடியவில்லை.

நடந்தவை எல்லாவற்றையும் ஒரு நொடியில் மறந்து நடக்க இருப்பவற்றைப் பற்றியும் சிந்தியாமல் சக்கரவர்த்தி அழகு