பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

||--

அப்பாத்துரையம் - 22

மொழிகளை ஒரு நூறாக அடுக்கினார். அருமை முத்தங்களை ஓராயிரமாகப் பொழிந்தார். ஆனால், அவள் பக்கமிருந்து ஒரு மூச்சுக்கூடப் பதிலாக எழவில்லை. ஏனெனில், இச்சமய மெல்லாம் எதையும் அவள் தெளிவாகக் காணும் நிலையிலோ கேட்கும் நிலையிலோ இல்லை. அவள் பார்வை மருண்டது. அறிவு மயங்கிற்று. படுக்கையில்தான் கிடக்கிறோமா, எங்கே கிடக்கிறோம் என்பதுகூட அவளுக்குத் தெரியாது.

அவளை இந்நிலையில் கண்ட சக்கரவர்த்தி செய்வது இன்னதென்றறியாமல் திகைத்தார். கலங்கிய நெஞ்சுடனும் குழம்பிய உள்ளத்துடனும் ஓர் இழுப்புச் சிவிகை கொண்டு வரும்படி அவர் கட்டளையிட்டார். ஆனால், அவளை அவர்கள் அதில் கிடத்தப் போகும் சமயம் தாம்செய்வது இன்னது என்று அறியாமலே அவர் இடையிட்டுத் தடுத்தார் ‘எங்கள் இருவரில் எவரும் தனியாக இறுதிப் பயணம் புறப்பட்டு விடக்கூடாது என்று எங்களிடையே ஓர் ஒப்பந்தம் உண்டு. ஆகவே, இப்போது என்னை விட்டு அவள் போகும்படி விடமாட்டேன்' என்று அவர் புலம்பினார். இவ் வார்த்தைகளை மட்டும் சீமாட்டியின் செவிகள் கேட்டன என்று தோற்றிற்று. ஏனெனில் அவள் இப்போது அவற்றுக்கு மறுமொழி கூறினாள். 'இறுதிப் பயணமா.!.... ஆம் நான் ஆவலுடன் விரும்பும் அதனைத் தனியே மேற்கொள்ள முடியுமானால் அதுவரை மகிழ்வுடன் வாழ்வேனே!' என்றாள்.

தளர்ந்து வரும் மூச்சுடன் மிகத் தணிவான குரலில் அவள் பேசினாள். ஆனால், அவள் எப்படியோ குரலெழுப்பினாளே தவிர, அதற்கான சக்தியற்றவளாய் முழு உயிரும் கொடுத்தே ஒவ்வொரு சொல்லையும் உருவாக்கினாள். எப்பாடு பட்டும் அவளை இறுதிவரை தம்முடனேயே வைத்துக்கொள்ளச் சக்கரவர்த்தி எண்ணினாலும் அது முடியவில்லை. அவளுக்கு இறுதிக்காலப் பாசுரம் பாடுவதற்காகக் குருமார் ஏற்கெனவே அவள் இல்லத்துக்கு அனுப்பப்பட்டிருந்தனர். எப்படியும் விளக்கேற்றும் நேரத்துக்குள் அவளை வீட்டுக்கு அனுப்பியாக வேண்டும். ஆகவே, இறுதியில் ஒரு வழியாகச் சக்கரவர்த்தி அவளைச் சிவிகைக்காரர் வசம் ஒப்படைத்தார்.