பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

|--

அப்பாத்துரையம் - 22

என்பதையே தாயின் பாசம் மறக்கச் செய்திருந்தது. ஆனால், பாடையில் தீ மூண்டதே, உடலின் நிலையை அப்போதுதான் கண்டதுபோல உள்ளம் துடித்தது. அதுமுதல் எவ்வளவு முயன்றும் அவளால் இயல்பான தன்னறிவுடன் பேசமுடிய வில்லை. அவள் தலை சுற்றிற்று. வண்டியிலிருந்து அவள் கீழே விழுந்து புரண்டாள். முழுத்துயரையும் அவள் இப்போதுதான் உணர்ந்தாள் என்று அருகிலிருந்தோர் கூறிக்கொண்டனர்.

அரண்மனை வள்ளுவன் வந்து ஒரு திருமுறை விளம்பரத்தை வாசித்தான். அதன்படி மாண்ட சீமாட்டியின் அன்னை மூன்றாவது படித்தரச் சீமாட்டியாக உயர்த்தப் பட்டிருந்தாள். பாடையருகிலே அந்த நீண்ட விளம்பரத்தின் வாசகம் வாசிக்கப்பட்டபோது, அதுவும் ஒரு துயரார்ந்த நிகழ்ச்சிபோலவே அமைந்திருந்தது. நெடுநாள் முன்னதாகவே அவளை ஒரு பாங்கியாக உயர்த்தினோமில்லையே என்று சக்கரவர்த்தி பெரிதும் வருந்தினார். ஒருபடியேனும் இப்போது அவளை உயர்த்தியதற்கு இதுவே காரணம். ஆனால், இந்தச் சிறிதளவு மதிப்புக்குக்கூட அவள்மீது பெறாமை கொண்டவர் பலர். வேறு சிலர் சற்றுத் தாராள மனப்பான்மை யுடையவரா யிருந்தனர்.அவள் உண்மையிலேயே பேரழகு வாய்ந்தவள் என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்கத் தயங்கவில்லை. மற்றுஞ்சிலர் அவள் இனிய அமைந்த குணநலங்களைக் கண்டு

பாராட்டினர் இவ்வளவு இனிய குணம் வாய்ந்த

மாதரசியைக்கூட யாரேனும் வெறுக்கக் கூடுமா, இது என்ன வெட்கக்கேடு என்றும் சிலர் துணிந்து பேசினர்'. நேர்மையற்ற முறையில் அவள் இவ்வாறு தனிப்படுத்தப்பட்டு விடவில்லை யானால் அவளைப்பற்றி எதுவும் எவராலும் பேச வாய்ப்பே ஏற்பட்டிராதென்றும் அவர்கள் கருதினார்கள்.

சக்கரவர்த்தியின் கட்டளைப்படி, ஏழுவார காலம் இழவு வினைமுறைகள் விரிவாகக் கொண்டாடப்பட்டன. நாட்கள் பல கடந்தும் சக்கரவர்த்தி அரண்மனை மாதர் பகுதியைவிட்டு வெளிவரவேயில்லை. அவரிடம் அணுக்க வேலை செய்து வந்தவர்களின் வாழ்வில் ஒளியில்லாது போயிற்று. ஏனெனில் அவர் ஓயாது இராப்பகல் கண்ணீர் வடித்தபடியே கழித்தார்.

கோக்கிடன் சீமாட்டிக்கோ மற்ற உயர்படி அணங் குகளுக்கோகூட ஒரு சிறிதும் உளக்கனிவு ஏற்படவில்லை.