பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

17

'மாண்ட சீமாட்டி இருந்தபோதும் சக்கரவர்த்தி அறிவிழந்தவரா யிருந்தார். இப்போதும் அவர் நிலையில் வேறுபாடு கிடையாது; அதைவிட அறிவிழந்தவராகவே திரிகிறார்' என்று அவர்கள் பேசிவந்தனர். சிலசமயம் சக்கரவர்த்தி தன் முதல் புதல்வனான கோக்கிடன் சீமாட்டியின் பிள்ளையைச் சென்று பார்ப்பதுண்டு. ஆனால், அப்போதுகூட மாண்ட சீமாட்டியின் புதல்வன் எண்ணம் வந்து அவரை அலைக்கழித்தது. மிக நம்பகமான வேலையாட்களையோ, சிலசமயம் தன் செவிலியையோ அனுப்பிச் சிறுவன் நிலைபற்றி அவர் தகவலறிந்துவந்தார்.

இலையுதிர் காலத்தின் நடுநாள் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மாலைக் காற்றுத் தன் தண் குளிர்க்கரங்களால் மனிதர் உடல்களில் சுறீர் சுறீர் என்று கிள்ளிற்று. சக்கர வர்த்தியின் உள்ளத்தடத்தில் பழைய நினைவுகள் எத்தனையோ வந்து வந்து மொய்த்தன. அவர் ஒரு கடிதத்துடன் தம் அம்பறாத் தூணிச் செல்வரின் சிறுபெண்ணை மாண்ட சீமாட்டியின் மாளிகைக்கு அனுப்பினார். அதன்பின் அவள் வரவை எதிர்நோக்கிக் கொண்டு இரவில் காத்திருந்தார். அன்று அழகிய நிலா எறித்துக் கொண்டிருந்தது. ஆனால் இசையுடன் இசையாகக் கலந்து உலவிய ஒரு தளர்ந்த மென்குரலையும், அதற்குரிய இளநிலா முகத்தையும், ஒயிலுடன் ஒசிந்து நெளியும் நடையையும் சேர்த்தே அவர் எதனையும் காணமுடிந்தது.

'இருளின் சூழலில் நனவுலகப் பொருள்களே கனவு ருக்களைவிட மாயமாகத் தோற்றவல்லன' என்று கருத்துரைக்கும் பாடல் இப்போது அவர் நினைவுக்கு வந்தது. பழைய இராக்கால நினைவுகள் அவ்வாறு கனவுருவாக வேனும் தோற்றாதா என்று சக்கரவர்த்தி ஏங்கினார்.

தூதுசென்ற சிறுமி மாளிகை வாயிலை அணுகினாள். அங்கே அவள் கண்ட காட்சி எதிர்பாராததாய் இருந்தது. மாளிகையின் சுற்றுப்புறமெங்கும் ஒரே புதர்க் காடாய்ப் பாழ்பட்டுக் கிடந்தது. ஏனெனில் இதற்குமுன்பெல்லாம் கைம்பெண்ணாயிருந்த பெரிய மாதரசி தன் புதல்வியாகிய சீமாட்டியிடமே மாளிகை மேற்பார்வை முழுவதையும் ஒப்படைத்திருந்தாள். இப்போது முதுமை ஒருபுறமும், புதல்வி இறந்ததாலேற்பட்ட கவலை ஒருபுறமும் அவளைச்