பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

அப்பாத்துரையம் - 22

து

துணிவு கொள்ளமுடியும்? மாண்பு மிக்க அரச ஆணை என்னை மீண்டும் மீண்டும் அழைத்தாலும், அவ் ஆணைக்கு என்னால் கீழ்ப்படியமுடியுமென்று எனக்குத் தோற்றவில்லை. ஆனால், அரண்மனை ஆணை இளவரசனுக்குத் தெரிய வருமோ, வராதோ - அவன் அங்கே வரத் துடிக்கிறானென்பது மட்டும் உறுதி. உண்மையில் இந்த இடத்தில் இருப்பதில் அவனுக்கு ஒருசிறிதும் கிளர்ச்சியேயில்லை. சக்கரவர்த்தியிடம் இதனைக் கூறுங்கள். இங்கே பேசப்பட்ட மற்ற விவரங்களையும் தெரிவியுங்கள். எப்படியும் இந்த மாளிகை சிறுகுழந்தையின் வாழ்வுக்கு உகந்ததல்ல.’

அம்பறாத்தூணிச் செல்வரின் சிறுமி இப்போது

பேசினாள்.

'குழந்தை உறங்கிவிட்டதென்று கேள்விப்படுகிறேன். அது எப்படி இருக்கிறது என்று நேரிலே பார்த்துச் சக்கரவர்த்திக்கு அதுபற்றித் தெரிவிக்கும் விருப்பம் உடையேன். ஆயினும் அரண்மனையில் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். நேரம் மிகுதியாய்விட்டது' என்றாள் அவள்.

அவள்போக

விரைந்தாள். ஆனால் விடவில்லை. அதுமேலும் தொடர்ந்தது.

தாயுள்ளம்

'தம் உள்ளத்தின் துயரார்ந்த எண்ணங்களின் இருளிடையே உழல்பவர் கூட நண்பர் உரையாடல் மூலம் சிறிது ஒளிபெற்று வழிகாண முடியும். ஆகவே, உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது நீங்களாகவே தனி முறையில் இங்கு வருகைதரும்படி கோருகிறேன். சென்ற காலங்களிலெல்லாம் மகிழ்விடையே வெற்றிப் பெருமிதத்துடன் நீங்கள் இங்கே வந்து சென்றிருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ நீங்கள் இத்தகு செய்தியுடன் வர வேண்டியதாகியுள்ளது. ஊழ்வாய்ப்பை நம்பி வாழ்வது எவ்வளவு அறியாமை!

‘என்புதல்வி பிறந்தநாள்முதல் தம்வாழ்வின் இறுதிவரை என் நெஞ்சறிந்த தலைவராகிய அவள் தந்தை அவளை அரசவைக்கே அனுப்பவேண்டுமென்று துடித்துக் கொண்டி ருந்தார். தாம் உயிர்விடநேர்ந்தால் இந்த அவாவைத் தளர விட்டுவிடக்கூடாதென்றுகூட அவர் என்னிடம் உறுதி