பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

21

கோரினார். இதனால்தான் தக்க பாதுகாவலரில்லாமல் அவளுக்குப் பல இக்கட்டுகள் நேரக் கூடுமென்பது எனக்குத் தெரிந்தபோதிலும்கூட, அவர் அவாவை நிறைவேற்ற நான் அரும்பாடுபட்டேன்.

'அரச அவையிலே சீமாட்டிக்கு ஆதரவுக்கு ஒரு குறைவுமில்லையானாலும், அவள் மனிதத்தன்மையற்ற தனிப் பகைமைகளின் தழும்புகளை எவ்வளவோ பொறுமையுடன் தாங்கி வதைபடவேண்டியதாயிற்று. அவள் தன்மீது சுமத்தப்பட்ட வெறுப்பின் பாரம் பொறுக்கமாட்டாமல் கொலையுண்டாளோ என்னும்படியாக வீணாக மாளநேர்ந்தது உண்மையில் அறிவார்ந்த மாண்புமிக்க சக்கரவர்த்தி அவளைப் புறக்கணித்தால்கூட நன்றாயிருந்திருக்கும். என் இதயத்தின் அறிவற்ற இருள் நிலையில் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது! அவர் அன்பு எத்தகைய புறக்கணிப்பையும் விடக் கொடுமை வாய்ந்ததாகவே முடிந்தது.'

கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீர் அவளை மேலும் பேச முடியாமல் தடுத்தது.

இப்போது நேரம் இரவாயிற்று.

சிறுமி மறுபடியும் பேசினாள்.

'இவை யாவும் அவரே கூறினார். அது மட்டுமோ? அவர் இன்னும் எவ்வளவோ புலம்பினார். “என் விருப்பாற்றல், அறிவமைதி எல்லாவற்றையும் கொள்ளை கொண்டுவிட்ட இந்தப் பாசப்புயல் என் கண்களைமூடி என்னை இழுத்துச் சென்று பலருக்குக் கண்ணுறுத்தலும் தந்துவிட்டது. இந்தப் பாசத்தின், அளவைப் பெரிதாக்கிய அதே ஊழ்தான் அதற்குரிய எங்கள் இன்ப ழ்வையும் இவ்வாறு குறுக்கியிருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். உடனடி பிரிவுக்கென்றே படைக்கப்பட்டவர்களின் வெறியார்ந்த குறுகிய காலப்புயலாக அது முடிந்தது. என் காதலுணர்ச்சி காரணமாக எவருக்கும் துன்பம் நேர்ந்துவிடக் கூடாது என்று நான் எவ்வளவோ முன்கருதலாயிருந்தபோதிலும், அவள் வகையில் எதுவும் பயனில்லாது போய்விட்டது. தாம் அவள் காரணமாகத் தீங்குக்கு ஆளாய்விட்டதாக நினைத்த பலபேரின் வெறுப்பும் அவள்மீது சுமந்து அவளை அழிவில் ஆழ்த்திவிட்டது?”