பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

23

சீமாட்டியின் அன்னையிடம் வருந்தி வேண்டிக் கொண்டார்கள். ஆனால் அம்மூதாட்டி தன் வாழ்வின் ஒளியிழந்த மாலைப் போதை அரண்மனையில் சென்று கழிக்க எண்ணவில்லை. அதே சமயம் இளவரசனை அங்கே அனுப்பிவிட்டு, நாள்தோறும் அவனைப்பற்றி ஏங்கி ஏங்கித் தவிக்கவும் அவள் விரும்பவில்லை.

தூது தாங்கிச்சென்ற அணங்கு சக்கரவர்த்தியைச் சென்று

கண்டபோது, அவர் முற்றிலும் விழித்துக் கொண்டேதான் இருந்தார். தூங்கி விடவில்லை. அரண்மனை முன்கூடத்திலுள்ள மலர்த்தொட்டிகள் அப்போதுதான் முழு மலர்ச்சியுற்றுப் பூத்துக்குலுங்கின. அவற்றைப் பார்வையிடும் சாக்குடன் அவர் முற்ற வெளியிலேயே உலவிக்கொண்டிருந்தார். அவருக்கு உள்ளந்தரங்கமான நாலைந்து நம்பகமான அரண்மனைப் பெண்டிருடனே இதற்காகவே அவர் மேலீடாகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இச்சமயங்களில் (குவீபீச் சீமாட்டியின் சோகக்கதை பற்றித்) 'தெய்ஜிநோஇன்' இயற்றிய பாடலுக்கு நேரான 'மாளாப்பழி' என்ற பட்டத்தையோ, 'யாமதோ' திணை மொழியில் தீட்டப்பட்ட கவிதையஞ்செல்வி ‘ஈசே', கவிஞர் ‘ட்ஸுயாயுகி' ஆகியோர் பாடல்களையோ சக்கரவர்த்தி பார்வையிட்டவண்ணம் உலாவுவார். அத்துடன் முதலில் குறிப்பிடப்பட்ட பாடலின் சோகக்கதை பற்றியே அவர் காலையும் மாலையும் உரையாடிக் கொண்டிருப்பது வழக்கம் என்று அறிகிறோம்.

தூதாக வந்த அணங்கின் பக்கம் சக்கரவர்த்தி வியப்புடன் திரும்பினார். ஆர்வத் துடிப்புடன், ‘செய்தி என்ன?' என்று கேட்டார். தூதணங்கு தான் கொண்டு வந்த துயரார்ந்த செய்தியைக் காதோடு காதாக உள்ளவாறு எடுத்துரைத்தாள். பின் சீமாட்டியின் அன்னை கொடுத்தனுப்பிய கடிதத்தை அவரிடம் கொடுத்தாள்.

அக்கடிதம் வருமாறு:

'மாட்சிமை தங்கிய பேரரசர் பிரானின் அன்புக் கட்டளைகளைச் சொற்களால் வருணிக்க முடியாத தூய உயர்