பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அப்பாத்துரையம் - 22

மதிப்புடன் வாசித்தேன். ஆனால், அவற்றிலடங்கிய செய்தி என் உள்ளத்தில் காரிருளையும் கலக்கத்தையுமே பரப்பியுள்ளது.

கடிதத்துடன் ஒருபாடல் இணைக்கப்பட்டிருந்தது. அதில் மாதரசி தன் பெயரனான இளவரசனை ஒரு மலராக வருணித்திருந்தாள். அம் மலர் தன்னைப் பெரும் புயல்களிருந்து காப்பாற்றிய மரத்தின் அரவணைப்பை இழந்து தவிப்பதாக அவள் புனைந்துரை மூலம் தன் கருத்தறிவித்திருந்தாள்.

பாடல் பிழை மலிந்ததாகவே இருந்தது. ஆனால் ஆறாத் துயரத்தின் பசும்புண்ணுடன் நடுங்கிய ஒரு கையே அதை எழுதிற்று என்பதை அவர் அறிந்திருந்தார். பிழைகள் அந்நோயின் சின்னங்கள் என்று அவர் கருதியிராவிட்டால், அவ்வளவு பிழைகளை அவர் பொறுத்துக் கொண்டிருக்க

மாட்டார்!

தூதணங்கின் முன்னிலையில் தம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் அடக்கிக்கொள்ளச் சக்கரவர்த்தி தம்மா லானமட்டும் முயன்றார்.ஆனால், மாண்ட சீமாட்டி முதன்முதல் அவரைச் சந்தித்த காட்சி அவர் மனக் கண்முன் ஓயாது நிழலாடிற்று. அச்சித்திரத்தை அடுத்து ஆயிரமாயிரம் நினைவுகள் அவர் உள்ளத்தில் வந்து நெருங்கி மொய்த்தன. ஒரு நினைவை யடுத்து அடுத்த நினைவு, அதனையடுத்து வேறொன்று என இடையறாது ஓடி,அவை அவரைத் தன்னிலை இழக்கச் செய்தன. ‘அந்தோ! இன்பத்தில் இழைந்த அந்த நாழிகைகள், யாமங்கள் - நாட்கள், மாதங்கள் காலக் கணிப்பையும் மாந்தர் கருத்துகளையும் பீறிட்டுக்கொண்டு யாவும் ஓடி விட்டனவே!' என்று புலம்பி அவர் சிந்தை நைந்தவராய் அழுங்கினார்.

-

இறுதியில் அவர் வாய்விட்டுக் கூறியது இவ்வளவே!

ஆ, மேல் மன்ற உறுப்பினரான அவர் தந்தை தெரிவித்துச் சென்ற விருப்பம் எவ்வளவு நிறைவளத்துடன் நிறைவேறியிருக்கக் கூடும்! அது நிறைவேறும் என்று பொங்கும் மகிழ்வுடன் நினைந்து நினைந்து நான் நாட்போக்கினேனே! இப்போது இவை கூறி என்செய்வது? ஆயினும் ஒருவேளை.. ஒரு வே.ை.. இளவரசன் வருங்கால வாழ்வில்.... அவன் வாழ்வு நிறை வாழ்வாக நீடுக என்று மட்டுமே நான் இனி இறைவனை இறைஞ்ச முடியும்!'