பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

25

தூதணங்கு கொண்டுவந்த பரிசுகளை அவர் நோக்கினார். ஆ, மீன்கொத்தி வடிவான கொண்டை ஊசி! அந்தோ, அவள் சென்றிருக்கும் வானக ஓடையின் நினைவாகக் கொண்டு வந்தனையோ, இதை?' என்றார். பின்னும் அவர் ஒரு பழம் பாடலை மேற்கோளாக எடுத்தாண்டார்.

வான் சென்று அவளை நாடும் ஒரு மாயாவி கண்டேனிலையே! வான் சென்று ஆவியுருவில் அவளுக்கென துயரை உரைக்கும் ஒரு மாயாவி கண்டேனிலையே!

என்று அவர் உருக்கமாகப் பாடினார்.

குவீபீயின் சித்திரம் வரைந்த ஓவியன் மாயத்திறம் படைத்தவன் தான். ஆனால், அச்சித்திரம் ஒரு தூரிகையின் வேலை மட்டுமே - உயிர்த்துடிப்பு அதில் இருந்திருக்க முடியாது. அவள் பொன்மேனியின் நுண்ணிய வனப்பு மன்னர் மன்னன் வே-யாங் பொய்கையில் நிழலாடும் வண்ணமலர் போன்றது; அதன் சாயல் அவன் பூங்காவில் ஒசிந்தாடும் வன்னிமரத்தின் பசுங் கொம்பு போன்றது' என்றெல்லா மல்லவா, கவிஞர் பாடினார்! படத்தில் காணும் மாதரசியின் உருவில் நாம் இவற்றைக் காண முடியாது முற்றிலும் முகச்சாயமும் நறுந்துகளும் நிரம்பிய ஒரு சாதாரணச் சப்பானிய உயர்குடி நங்கையாக மட்டுமே அது காட்சியளிக்கிறது!'

-

படத்தைப் பார்த்து இவ்வாறு எண்ணினார் சக்கரவர்த்தி.

மாண்ட சீமாட்டியின் குரலை, வடிவத்தை அவர் எண்ணுந்தோறும் பறவைகளின் இனிய கானத்திலோ, மலர்களின் மாய வனப்பிலோ அவர் எத்தகைய ஒப்புமை களையும் காணமுடியவில்லை. அந்தோ, காலை மாலை, எத்தனை நாள், எத்தனை தடவை அவர்கள் தம்முள் இரண்டறக் கலந்த உணர்வுடன் ஒரே இணைகுரலில் தெய்வத்திடம் பணிந்து வேண்டியிருந்தனர்: 'ஒரே ஒரு சிறகைத் தமக்குள் பகிர்ந்து கொள்ளும் இயல்புடைய இரட்டைப் பறவைகளை ஒத்து, ஒரே கிளையைத் தமக்குள் பொதுவாகக் கொண்ட இரட்டை மரங்களை ஒத்து இருவர் இணை உயிர்களும் இரண்டற்ற