பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அப்பாத்துரையம் - 22

நிலையில் இணைந்தியங்கும்படி தெய்வம் அருளுமாக' என்ற இவ்வேண்டுகோளை, அந்தோ, தெய்வம் நிறைவேற்றியிருக் கப்படாதா?

சக்கரவர்த்தியின் உள்ளத்தை மீளா நெடுந்துயரில் கொண்டு சாய்க்கக் காற்றின் ஒரு சிறு சலசலப்பு, பாச்சைகளின் ஒரு சிறு கொக்கரிப்புப் போதுமாயிருந்தது, இப்போது! ஆனால் கோக்கிடன் சீமாட்டி அவருக்குத் தன் அன்பழைப்பை அவசரக் கட்டளையாக்கி வானவெளி யூடாக அனுப்ப இச்சமயம் பார்த்துத் தானா துணிய வேண்டும்? இதுவரை அவர் மாடத்தின் பக்கமே நாடாத அவள் இப்போது இரவு முழுதும் துயிலொழித்து நிலாமுற்ற மாடத்திலிருந்து அவருக்காகப் பாடிக் கொண்டிருந்தாள். இது அவர் உள்ளத்தை ஆழ்ந்து கிண்டிக் கிளறிற்று - அவருடனிருந்த ஆயத்தாரும் பணிநங்கை யரும் அவர் நிலையை எண்ணிப் பெரிதும் துணுக்குற்றனர். ஆனால், காலமறியாது கணை எய்யத் தொடங்கிய அச்சீமாட்டி தன் தனி இறுமாப்பை ஒரு சிறிதும் விட்டுவிடவில்லை - அவள் அவரை நாடிவர மனங்கொள்ள வில்லையாயினும் அவளை நாடி அவர் வருவதற்கே காத்துக் கிடந்தாள் - அரண்மனையில் குறிப்பிடத்தக்க வேறு எந்த நிகழ்ச்சியும் நடந்திராதது போல நடக்கத் துணிந்து விட்டாள், அவள்!

இப்போது நிலா மேல்வானில் சென்று விழுந்தது.

அந்த இருளில் 'புதர்களுக்கிடையே அமைத்த அந்த மனையில், தன் காதலியின் தாய் இருக்கும் நிலையைச் சக்கரவர்த்தி எண்ணிப்பார்த்தார். அவள் உள்ளம் படும்பாட்டை உருவகம் செய்து ஒரு பாடலாகப் பாடினார்.

கூதிர் காலத்துக் குளிர் மதியம்

வான விளிம்பில் ஆழ்ந்து மறைவது கண்டு அத் தாய் உள்ளம் எவ்வாறு பொறுக்குமோ? முகில் மண்டலத்தின்மீது உலவுவதாகக் கூறப்படும் வானவர் (சக்கரவர்த்தி) ஆகிய என்போன்றார் கூட அதைக் கண்டு கலங்குகின்றோமே!'

என்று அவர் மனமாழ்கினார்!