பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அப்பாத்துரையம் - 22

தயங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் எல்லோரும் ஒரு மனதாகச் சக்கரவர்த்தியின் கூரறிவையும் முன்னெச்சரிக்கையையும் பாராட்டினார்கள். அவரும் அரசுரிமை மதிப்போ, தாய்வழி செல்வாக்கோ இல்லாமல் சிறுவனை உரிமை இளவரசனாக்கி அரண்மனையில் ஆதரவில்லாமல் தவிக்க விடுவதில்லை யென்று முடிவு செய்தார். 'என் ஆற்றலே பெரிதன்று. ஆகவே அரசியல் பெரும் பணி முதல்வர் மீது என் சார்பில் கண்காணிப்புச் செலுத்தும் பொறுப்பை அவனுக்கு அளிப்பேன்' என்று அவர் எண்ணினார். இதுவே சிறுவன் வருங்கால வளர்ச்சிக்குகந்த நல்ல திட்டமாகும் என்று கருதி அவர் சிறுவன் கல்வியிலேயே முழுக் கவனம் செலுத்த முனைந்தார்.

கலை இயல் துறைகள் ஒவ்வொன்றிலும் இளவரசன் முழுநிறை பயிற்சி பெறும்படி அவர் திட்டமிட்டார். இவ் வெல்லாத் துறைகளிலும் அவன் காட்டிய ஆர்வத்தையும் தகுதியையும் கண்டபோது, இத்தகைய சிறுவன் குடிச்சிறப்பு எதுவுமற்ற ஒரு பொது மனிதனாக நேர்ந்ததே என்று அவர் உள்ளம் வருந்திற்று. எனவே, பிறைக் கணிப்பிலும் கோளினங் களின் போக்கிலும் வல்ல பல அறிஞர்களை அவர் மேலும் அழைத்துத் தக்க ஆலோசனைகள் நடத்தினார். அவர்கள் அனைவரும் ஒருமனதாக ஒரே அறிவுரை கூறினார்கள். பெருமக்களுடனே போட்டியிடுமளவுக்குப் பொது மக் களிடையே செல்வாக்குப் படைத்த 'மினமோட்டோ என்ற ஜென் குழுவினருள் அவனை ஒருவனாக்கும்படி அவர்கள் சக்கரவர்த்தியை வேண்டினர். இது மிக எளிதில்

நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆண்டுகள் எத்தனை சென்றும் சக்கரவர்த்தி மாண்ட சீமாட்டியை ஒரு சிறிதும் மறக்க முடியவில்லை. அம்மறதியையும் அவர் இன்ப ஈடுபாட்டையும் கருதி அரண்மனை ஆட்சியாளர் எத்தனையோ மாதரசியரை அரண்மனைக்குக் கொண்டுவரத் தவறவில்லை. ஆனால், மாண்ட சீமாட்டிக்கு ஈடுசோடு எவரும் இல்லை என்ற உறுதியுடன் சக்கரவர்த்தி அவர்கள் எவரையும் கண்ணெடுத்துப் பாராமலே திருப்பி அனுப்பி வைத்தார். ஆயினும் ஒரு மாதரசியின் புகழ் எங்கும் அலையோடிப் பரவியிருந்தது. அவள் முந்திய ஒரு சக்கரவர்த்தியின் புதல்வி.