பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

33

அவள் அன்னை கைம் பெண்ணாக ஒதுங்கி வாழ்ந்த ஒரு பேரரசியே. அவள் அப்புதல்வியைக் கண்ணாக, கண்ணின் இமை போல் காத்து வளர்த்து வந்தாள்.

முந்திய சக்கரவர்த்தியிடமே பணி செய்த அரண்மனை மாதரசி ஒருத்தி அவ் இளவரசியுடன் நெருங்கிப் பழகி வந்தாள். சிறு குழந்தை முதலே இளவரசியை நன்கு அறிந்தவளாதலால், இளவரசி பருவமடைந்த பின்னும் அவளைச் சென்று காணும் வாய்ப்பு அம்மாதரசிக்கு இருந்தது. அவள் சக்கரவர்த்தியிடம் அடிக்கடி அவ்விளவரசியைப் பற்றிப் பேசுவதுண்டு.

'பேரரசே!' மூன்று சக்கரவர்த்திகளின் பேரவைகளின் நான் பங்கு கொண்டு பணியாற்றி வந்திருக்கிறேன். அவ்வளவு நாட்களிலும் மாண்ட சீமாட்டியின் அரிய பேரழகுக்கு ஈடாகக் கருதக்கூடிய வேறு எந்நங்கையையும் நான் கண்ட தேயில்லை. ஆனால், இந்த இளவரசி மாண்ட சீமாட்டியின் ஓர் அச்சுப் பிழம்பாகவே திகழ்கிறாள். அத்தகைய முழு நிறை பெண்மையின் எழிலுருவம் அவள்!' என்று அவள் அடிக்கடி கூறுவாள்.

அவள் பேச்சில் எந்த அளவு உண்மை இருக்கக்கூடுமோ என்று வியந்தவராய், அரைகுறை நம்பிக்கையுடனேயே சக்கரவர்த்தி இப்பேச்சுகளுக்குச் செவி கொடுத்து வந்தார், ஆயினும் 'மாண்ட சீமாட்டியின் சாயல்' என்ற ஒரே செய்தி அவர் உள்ளத்தின் ஆழ் தடத்தில் அவ்வப்போது ன்னதென்றறியாத விதிர் விதிர்ப்பை உண்டு பண்ணி வந்தது.

இவற்றையெல்லாம் கேட்ட பேரரசியாகிய அன்னை மிகவும் கலவரம் அடைந்தாள். ஏனென்றால், முன்னைய சீமாட்டியைக் கோக்கிடன் சீமாட்டி எவ்வளவு வன் கண்மையுடனும் கொடுமையுடனும் நடத்தி யிருந்தாளென்பதை அவள் கேள்வியுற்றிருந்தாள். இந்த அச்சத்தை வெளிக் காட்டாமலே, அது காரணமாக அவள் இளவரசி பருவ மடைந்த பின்னும் அவளைப் பேரவையில் திரு முன்னிலைப் படுத்தத் தயங்கிக் காலம் த்திக் கொண்டு வந்தாள். ஆனால் இந்நிலையிலேயே அவள் திடுமென உலகு நீத்தாள்.

தாயிழந்து தன்னந் தனியளாகத் தவித்த இளவரசியின் இரங்கத்தக்க நிலைபற்றிக் கேள்விப்பட்டார், சக்கரவர்த்தி!