பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

அப்பாத்துரையம் - 22

அன்னைக்கும் இளவரசிக்கும் தோற்றத்தில் எவ்வளவு ஒற்றுமை இருந்தது என்று வியந்துரைப்பதை அவன் கேட்டிருந்தான். அவன் இள உள்ளத்தின் கற்பனையில் அவள் மீது அவனுக்கு ஒரு புதிய அக்கறையை இது உண்டு பண்ணிற்று. தாய்மைப் பாசமும் இளமை உணர்ச்சிகளும் அவன் உள்ளத்தில் தடுமாறின. அவள் நட்பைப் பெற்று அவளுடனே வாழ்நாள் முழுதும் கழிப்பதை விடப் பெரும் பேறு, பெரிய இன்பம் வேறு இல்லை என்று ஏதோ ஒன்று அவன் அகச் செவிகளில் ஓதி வந்தது.

சக்கரவர்த்தியே ஒரு சமயம் அவன் உள்ளப் போக்கை இளவரசிக்கு எடுத்து விளக்கி, ஏற்கெனவே அவனிடம் ஈடுபட்ட அவள் இதயத்தின் சாய்வை நிலையாக அத்திசைப்படுத்த நேர்ந்தது.

இளவரசியே! இந்த இள ள உள்ளத்தை அறியாமல் எக்காலத்திலும் அதைக் கடுமையுடன் புறக்கணித்து ஒதுக்கி விடாதே! தன் தாயின் சாயல் உன்னிடம் எவ்வளவு பொருந் தியுள்ளது என்பதை அவன் பல தடவை கேள்வியுற்றிருக்கிறான். உன்னிடம் அவன் காட்டும் பாசத்தை இதுவே பன்மடங்கு பெருக்குகிறது என்பதை நான் அறிவேன். இந்நிலையில், தகாத முறையில் அவன் உன்னைத் தொந்தரவு செய்வதாக என்றும் எண்ணாதே, உனக்குரிய முழு நயநாகரிகத்துடன் அவனுடன் பழகுவாய் என்று நம்புகிறேன்' என்று அவர் அடிக்கடி கூறுவார். அத்துடன் ‘உன் தோற்றத்துக்கும் அவன் தாய் தோற்றத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் காண, நீ மட்டும் இவ்வளவு இளமையுடையவளாய் இல்லாமலிருந்தால், நீயேதான் அவன் தாயோ என்று கூட எவரும் எண்ணுதல் இயல்பு' என்று சக்கரவர்த்தி நயம்பட அவளிடம் பேசி யிருந்தார்.

இவ்வாறு, மிக இளம் பருவத்திலேயே, இளமையின் மாயச் சூழ்நிலையிலேயே ளவரசியின் மாய அழகு அவன் பசுமை யுள்ளத்தில் பதிந்தது. புஜித்சுபோ இளவரசியின் உருவமே அதன்மீது உருவான முதல் தடமாகவும், இறுதிவரை அழியாத உயிர்த்தடமாகவும் விளங்கிற்று.

கோக்கிடன் சீமாட்டி இளவரசியை என்றும் மனம் விட்டு நேசித்ததில்லை. இப்போது அவளுடன் பழகிய கெஞ்சி இளவரசன் மீது அவளுக்கு முன்பு இருந்த பகைமை மீட்டும்