பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் - 22

விழாவின் வினைமுறைகள் சக்கரவர்த்திக்கே உரிய தனி மாளிகையின் கீழ்பாரிசத்தில் ஒழுங்குசெய்யப்பட்டன. சக்கரவர்த்தியின் பொன் அரியாசனம் கீழ் திசைநோக்கி அமைக்கப்பட்டது. விழாத் தந்தையாகப் பொறுப்பேற்ற இடங்கை அமைச்சரின் இருக்கை அதன் முன்னாலேயே நிறுவப்பட்டது.

று

குரங்கின் ஓரையில், அதாவது பிற்பகல் மூன்று மணிக்குக் கெஞ்சி இளவரசன் விழாவரங்கத்துக்கு வந்து சேர்ந்தான். இளநலம்வாய்ந்த அவன் நெடுநீளமான தலைமுடி அவன் அழகுக்கு அழகு செய்வதாயிருந்தது. அதை வார்ந்தெடுத்து ஊதா நாடாவால் கட்டுவது விழாத் தந்தையின் வினைமுறைக் கடமைகளில் ஒன்றாய் இருந்தது. ஒன்றாய் இருந்தது. ஆனால், அதைக் கட்டும்போதே ‘இந்த அழகுக் காட்சிக்கு இன்று ஒருமுடிவு ஏற்பட்டுவிடுமே' என்று அவரால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. அதைக் கத்திரியால் கத்திரிக்கும் பொறுப்புடைய கருவூல எழுத்தாயர் கூடத் தம் இன்றியமையாக் கடமை பற்றி மனங்கவன்றார்.

'இவ் வினிய விழாவை இளவரசன் தாய் உயிருடனிருந்து பார்த்தால் எவ்வளவு பெருமைப்படுவாள். அவள் இருந்து காணக் கொடுத்து வைக்கவில்லையே' என்று சக்கரவர்த்தி ஒருகணம் பொருமினார். ஆனால், நல்லோரையில் அத்தகைய துயர எண்ணங்கள் புகுவது தகாது என்று எண்ணி அந்த எண்ண அலையை அவர் விரைவில் மாற்ற முனைந்தார்.

முறைப்படி முடிகவித்துக் கெஞ்சி தன் அறைக்குச் சென்றான். அங்கிருந்து தன் உடையைமாற்றி முழுநிறை ஆடவருடையுடன் மீண்டும் விழாமேடைக்கு வந்து, சக்கரவர்த்

க்குத் தன் வணக்கவழிபாடு தெரிவிக்கும் பூசனை நடன மாடினான். அவ்வாடலின் நளின ஒய்யாரம் கண்ட எல்லார் கண்களிலும் நீர்துளிர்த்தது. தம் பழந்துயரங்களைச் சிலகாலமாக மறந்திருந்த சக்கரவர்த்தி இக்காட்சியால் மீண்டும் பழமையின் இருளார்ந்த எண்ணங்களில் ஆழ்ந்தார்.

குழந்தை ஆடை களைந்தபின் கெஞ்சி இளவரசன் தோற்றம் முன்போல அவ்வளவு பொலிவுடையதாய் இருக்க முடியாது என்றே பலரும் எண்ணிருந்தார்கள். ஆனால், அவர்கள்