பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

39

இனிய வியப்பில் மூழ்கினர். ஏனெனில் முழு ஆடவருடையில் அவன் எழில்வண்ணம் முன்னிலும் பன்மடங்காக ஒளி வீசிற்று.

விழாத் தந்தையாகிய இடங்கை அமைச்சருக்கு ஒரு புதல்வி இருந்தாள். பட்டத்து இளவரசன் உள்ளத்தை அவள் அழகு கவர்ந்திருந்தது. ஆனால், அமைச்சர் பட்டத்து இளவரசன் உறவைப் பெரிதாக மதிக்கவோ, ஆதரவு தரவோ முன்வரவில்லை. அவர் தம் புதல்வியைக் கஞ்சி இளவரசனுக்கே தர அவாக் கொண்டார். சக்கரவர்த்தியிடம் இச்செய்தி மெல்லத் தெரிவிக்கப் பட்டது, அதை அவர் ஆர்வத்துடன் வரவேற்றார். ஆற்றல்மிக்க இத்தொடர்பு தம் புதல்வனுக்கு மிகவும் நலம் தருவது என்று அவர் கருதினார்.

அரண்மனைவாணர் அனைவரும் திருமண நறுங்களத்தில் பங்கு கொண்டு பருக அமர்ந்தனர். அச்சமயம் இளவரசன் கெஞ்சி மற்ற இளவரசர்களுடன் தனது இடத்தில் வந்து அமர்ந்தான். இடங்கை அமைச்சர் அச்சமயம் அவனருகே வந்து காதில் ஏதோ இனிய இரகசிய மொழிகள் புகன்றார். அவன் முகம் நாணத்தால் சிவந்து கன்னங்கள் இனிய சுழிகள் பூத்தன. ஆனால், அவன் இவை தவிர வாய் திறந்து எத்தகைய மறுமொழியும் கூறவில்லை.

அரண்மனை ‘அகபட்டிச்’ செயலாளர் ஒருவர் இச்சமயம் அமைச்சரை அணுகினார். சக்கரவர்த்தியை உடனடியாக வந்து காணும்படி செய்தி அறிவித்தார். சக்கரவர்த்தியின் தவிசை அவர் அணுகியதே, அணியரங்கச் சீமாட்டி ஒருத்தி அவரிடம் ஒரு வெண்ணிற உள்ளாடையையும் கன்னிமைக்குரிய கச்சு ஒன்றையும் வழங்கினாள். இளவரசனின் நிறைநாள் விழாத் தந்தை என்ற முறையில், அவரிடம் அளிக்கப்படவேண்டிய இளம்பருவச் சின்னங்களே இவை. சக்கரவர்த்தி இதன் பின் தம் பேரரசுரிமைக் கலத்திலிருந்து அவருக்குத் தேம்பாகு ஊற்றிப் பருகுவித்தார்.

இன்று கட்டப்படும் ஊதா நிற நாடா நம் இருகுடிகளின் தளரா இணைப்பின் சின்னமாகுக!' என்ற கருத்துடைய இனிய கவிதையைச் சக்கரவர்த்தி அமைச்சரிடம் வெளியிட்டார். 'ஊதா நாடா ஒளி மழுங்கினாலன்றி இரு குடும்பங்களின் இணைவு என்றும் தளர்வுறாதென்று உறுதி கூறுகிறேன்' என்று அமைச்சர் பதிலளித்தார். அதன்பின் அவர் பேரரசர் அரியாசனத்தின்