பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் - 22

புறக் குதிக்க விரும்பவில்லை. அற்பக் கேளிக்கைகளிலோ, வெளிப்படையான சாதாரண செய்திகளிலோ அவன் மனம் செல்லவும் இல்லை. அவன் இயல்பு இவ்வகையில் விசித்திரமா யிருந்தது. அவ்வப்போது அருமையாகச் சில வேளைகளில்தான் காதல் அவனை ஆட்டிப்படைத்தது. ஆனால், அது அவன் உள்ளத்தை ஆட்கொண்ட அச்சில வேளைகளில் எவரும் எதிர்பாராத விசித்திர இடங்களில்தான் அது சென்றது. தடைகளை எல்லாம் மீறி அது அவனை முன்னோக்கி உந்தித் தள்ளிற்று. எதிர்பாராத மிக மோசமான சிக்கல்களிலும் குளறுபடிகளிலும் அது அவனைக் கொண்டு மாட்டி விட்டது.

காலம் அடைமழைக் குரியதாய் இருந்தது. பலநாட்களாக

மூடிய வானம் ஒரு சிறிதுகூட இடைவெளியிட்டு ஒளி காட்டியதில்லை. அரசவையோர் இது காரணமாக மிகக் கடுமையான நோன்புகளில் ஈடுபட்டிருந்தனர். இளவரசன் கெஞ்சி ஏற்கெனவே நெடுநாட்களாக அரண்மனையில் அடைபட்டுக் கிடந்துவிட்டான். நெடுமாடத்திலுள்ளோர் அனைவரும் அவன் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்துப் பொறுமையிழந்து தவித்தனர். ஆனால், அரண்மனையிலுள்ள பணி மைந்தர்கள் வேறு யாரிடம் சேவை செய்வதையும் விடக் கெஞ்சி இளவரசனிடம் சேவைச் செய்வதிலேயே மிகவும் ஆர்வம் காட்டினர். ஒவ்வொரு கணத்திலும் அவன் ஆடையணி அலங்காரங்களை ஒவ்வொரு புதியஉருவில் ஒப்பனை செய்வ திலேயே அவர்கள் விறுவிறுப்புடன் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய அரசவைத் தோழர்களிலே கெஞ்சிக்கு உகந்த சிறந்த நண்பன் அரண்மனை இலாயக் காவலின் பொறுப்பேற்று இருந்த இளைஞன் தோ நோ சூஜோவே. அவனுடன் பேசுவதிலும் விளையாடுவதிலும் கெஞ்சிக்குப் பொழுது போவதே தெரிவதில்லை.

தோ நோ சூஜோவுக்காக அவன் மாமனார் வலங்கை யமைச்சர் அரு முயற்சியுடன் ஒரு மாளிகை கட்டியிருந்தார். ஆனால், அவனுக்கு அந்த மாளிகையில் தங்குவதில் ஒரு சிறிதும் விருப்பமில்லை. கெஞ்சியைப் போலவே அவனும் மாமனார் மாளிகையின் ஒய்யாரமான தனி வசதிகளைவிட அரண் மனையின் தங்குதடையற்ற படாடோப வாழ்வையே பெரிதாகக்