பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

45

கொண்டான். இருவர் நட்பையும் இது வளர்த்து, அரண் மனையிலேயே இருவரையும் இடையறாத் தோழமை கொள்ளச் செய்தது. இருவரும் அங்கேயே ஒன்றாகப் படித்தும் விளையாடியும் பொழுது போக்கினர். தமக்குரிய எல்லா வேலைகளையும் இருவரும் ஒன்றாகவே இருந்து செய்தனர். இதனால் சாதாரண நண்பர்களிடையே உள்ள ஆசார உபசாரங்கள்கூட அவர்களுக்கு இல்லா தொழிந்தது. ஒருவர் உள்ளத்தின் எந்த இரகசியமும் அடுத்தவர் உள்ளத்தில் தங்குதடையின்றிச் சென்று உலவிற்று.

ஒரு நாள் இரவு மழை விடாது ஊற்றிய வண்ணமாக இருந்தது. அரண்மனையில் அச்சமயம் ஆள் நடமாட்டம் மிகுதி இல்லை. இளவரசன் கெஞ்சியின் அறையிலோ வழக்க மீறிய அமைதி குடி கொண்டிருந்தது. இளவரசன் விளக்கருகே அமர்ந்து ஏடுகளையும் தாள்களையும் கிளறிப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவன் தன் மேஜையின் உள்ளறையிலிருந்து சில கடிதங்களைக் கையில் எடுத்தான். இது அருகே அமர்ந்திருந்த தோ நோ சூஜோவின் ஆர்வ அவாவைக் கிளப்பிற்று. அவற்றின் பக்கம் அவன் நாட்டம் திரும்பிற்று. கெஞ்சி அவன் குறிப்பை உணர்ந்து முன்கூட்டி அவனைத் தட்டிக் கழிக்க முயன்றான். 'இவற்றுள் சிலவற்றை நீ பார்க்கலாம்.சூஜோ! ஆனால் வேறு சிலவற்றை..!' அவன் பேசி முடியுமுன் விலக்கிக் காட்டிய அச்சிலவற்றையே சூஜோ பாய்ந்து கைப்பற்றினான். ‘சாதாரணக் கடிதங்களை நான் பார்ப்பதால் என்ன பலன்? அவை என் கடிதங்களையும் எல்லார் கடிதங்களையும் போலத்தான் இருக்கும். தனிப்பட்ட ஆர்வ உணர்ச்சித் துடிப்பு, கோபதாபம், இரகசியச் சந்திப்புத் திட்டம், மாலையிருளின் மறைவிடக் கை கலப்புகள் - இவை குறித்த உன் இரகசியக் கடிதங்களைத்' தான் நான் பார்க்க விரும்புகிறேன்' என்றான் அவன்.

சூஜோவின் வற்புறுத்தலைவிட அவன் ஆர்வ வேண்டு கோள் கெஞ்சியை இணங்க வைத்தது. ஆகவே உள்ளறையிலுள்ள கடிதங்கள் அவ்வளவையுமே அவன் புரட்டிப் பார்வையிட விட்டுக் கையைக் கட்டிக் கொண்டிருந்தான். உண்மையில் இந்த விட்டுக்கொடுப்பால் எந்தக் காரியமும் முழுகிப் போய் விடவில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஏனெனில்,