பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 22

‘என் அனுபவம் போதாததாய் இருக்கலாம். ஆனால் நான் கண்ட அளவில், என் முடிவு இதுவே' என்று கூறி அவன் ஓய்ந்தான்.

கெஞ்சியின் முகம் மெல்லப் புன்முறுவல் பூத்தது. 'அப்படியானால், அந்த ஓரிரு அருந்திறமைகூட இல்லாத வர்களும் இருக்கக் கூடுமல்லவா?' என்று கேட்டான்.

சூஜோ மறுமொழியாக மேலும் பேசத் தொடங்கினான்.

கட்டாயமாக இருக்கக் கூடும். ஆனால், எவரையும் இத்தகையவர்கள் அவ்வளவு திறமையாக ஏய்த்துவிட மாட்டார்கள். மேலும் எந்த நல்ல திறங்களும் இல்லாத இத்தகையவர்களின் தொகையும், நல்ல திறங்களே முழுதும் நிரம்பியிருக்கக் கூடியவர்களின் தொகையும் கிட்டத்தட்டச் சரிசமமாகவே இருக்குமென்று எண்ணுகிறேன்.

'மொத்தத்தில் பெண்களை நான் மூன்று வகையினராகப் பாகுபாடு செய்ய விரும்புகிறேன். முதலாவது வகுப்பினர் உயர்ந்த மதிப்பும் குடிப்பெருமையும் உடையவர்கள். அவர்கள் எங்கும் உச்ச அளவில் ஆரவாரமாகப் புகழப்படுகிறார்கள். இதனால் அவர்கள் குறைகள் எவையும் ஒரு சிறிதும் தெரியாமல் அவற்றின் மீது மூடுதிரை இடப்பட்டு விடுகின்றது. உண்மை நிலைக்குப் பெரிதும் மாறாக, அவர்கள் நம் கண்முன் அப்பழுக்கற்ற முன்மாதிரிகளாகக் காட்டப்படுகிறார்கள். அடுத்தபடியாக நடுத்தர வகுப்பினரிடையே எவரைப் பற்றியும் எவரும் தம் கருத்தைத் தாராளமாக எடுத்துரைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இக்காரணத்தால் இங்கே ஒன்றுக்கொன்று முரண்பட்ட மதிப்புரைகளே மிகுதி. காண்பவற்றையும் கேட்பவற்றையும் ஒப்பிட்டு அரித்துப் பார்த்தாலன்றி, இங்கே எந்த முடிவும் சொல்ல இயலாது. நன்மையும், தீமையும் விரவிய வகுப்பு இதுவே. மூன்றாவது வகுப்பு கீழ் வகுப்பே. அதைப் பற்றி நாம் இங்கே பேச வேண்டியதில்லை.'

தோ நோ சூஜோ முற்ற முடிந்த உருவில் எல்லாவற்றையும் தீர்த்துக்கட்டிக் கூறிய வகை கண்டு கெஞ்சிக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. 'உன்னுடைய இந்த மூன்று வகுப்புகளில் எந்தப் பெண் எந்த வகுப்பில் சேர்க்கப்பட வேண்டியவள் என்று தீர்மானிப்பதே